மீல் மேக்கரில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்


Alagar Raj AP
31-12-2024, 12:36 IST
www.herzindagi.com

மீல் மேக்கர் நன்மைகள்

    காளான், பன்னீர் வரிசையில் சைவப் பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று மீல் மேக்கர். அதனால் தான் மீள் ‘சைவ இறைச்சி’ என்றும் அழைக்கப்படுகிறது. சோயா பீன் எண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு மீல் மேக்கர் தயாரிக்கப்படுகிறது. இதை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

தசை வளர்ச்சி

    மீல் மேக்கர் தசை வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கிறது. மீல் மேக்கரில் காணப்படும் புரதத்தின் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் தசைகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

எலும்புகளுக்கு நல்லது

    எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மீல் மேக்கர் மிகவும் நல்லது. இதில் உள்ள கால்சியம், துத்தநாகம், செலினியம் மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகளின் வளர்ச்சி மற்றும் வலுத்தன்மைக்கு சிறந்தது.

இதய ஆரோக்கியம்

    மீல் மேக்கரில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. இதன் காரணமாக இதயம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

ஹார்மோன் சமநிலை

    பெண்களின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் மீல் மேக்கரில் உள்ளது. இது மாதவிடாய் மற்றும் மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் அசௌகரியங்களை குறைக்கிறது.

இரத்த சர்க்கரை அளவு

    நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கும் ஐசோஃப்ளேவோன்கள் எனும் கலவை மீல் மேக்கரில் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க செய்கிறது.

எடை மேலாண்மை

    மீல் மேக்கரில் உள்ள நார்ச்சத்து உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தரும். மேலும் இதில் உள்ள புரதம் உங்களுக்கு தேவையான ஆற்றலை தரும். இதனால் உடல் எடையை குறைக்க மீல் மேக்கர் உதவுகிறது.