ஒரே வருடத்தில் உடல் பருமனை குறைக்க கலா மாஸ்டர் என்ன செய்தார் தெரியுமா?


Sreeja Kumar
12-09-2023, 02:00 IST
www.herzindagi.com

கலா மாஸ்டர்

    பிரபல நடன இயக்குனரான கலா மாஸ்டர் மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சில வருடங்களுக்கு முன்பு அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு வெயிட் லாஸ் செய்து உடல் எடையை குறைத்தார். எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.

Image Credit : instagram

டெலிவரி

    இளமை பருவத்தில் படு ஒல்லியாக இருந்த மாஸ்டர், பிரசவத்திற்கு பிறகு அதிக எடை கூடினாராம். இதனால் அவருக்கு கொலஸ்ட்ரால், தைராய்டு போன்ற பிரச்சனைகளும் ஏற்பட்டதால் வெயிட் லாஸ் செய்ய முடிவு எடுத்தாராம்.

Image Credit : instagram

1 மாதம்

    முதல் முயற்சியாக 1 மாதம் அரிசி உணவே எடுத்து கொள்ளாமல் லிக்விட் உணவுகளை மட்டும் தான் குடித்தாராம். ஃபிரஷ் ஜூஸ், புரோட்டீன் பவுடர் இதை மட்டும் தான் சாப்பிட்டாராம்.

Image Credit : instagram

டயட்

    பின்பு தனது டயட்டில் முட்டை, சிக்கன் போன்றவற்றை சேர்த்து கொண்டாராம். உணவின் அளவை பாதியாக குறைத்து கொண்டு ஆரோக்கியத்திற்கு நட்ஸ், ஸ்மூத்தி போன்றவற்றை எடுத்து கொண்டாராம்.

Image Credit : instagram

யோகா

    தினமும் சுமார் 1 வருடத்திற்கு ஒரு நாள் கூட மிஸ் செய்யாமல் யோகா செய்தாராம். அதிலும் குறிப்பாக மூச்சு பயிற்சி தொப்பை குறைய பெரிதும் உதவியதாம்.

Image Credit : instagram

வாக்கிங்

    தினமும் 30 நிமிடம் நடப்பாராம். வாக்கிங் உடலுக்கு நல்ல வடிவத்தை கொடுத்து, கொழுப்புகள், தேவையற்ற சதைகளை கரைக்கும் என்கிறார் கலா மாஸ்டர்.

Image Credit : instagram