செம்ம லாங்க் ஹேர்! டான்சர் ஹேமா தயால் முடிக்காக என்ன செய்கிறார் தெரியுமா?
Sreeja Kumar
05-09-2023, 13:49 IST
www.herzindagi.com
ஹேமா தயால்
டான்ஸர், சின்னத்திரை நடிகை என பலமுகங்களை கொண்டவர் ஹேமா தயால். தற்போது மீனாட்ச்சி பொண்ணுங்க சீரியலில் நடித்து வருகிறார். இவரின் நீளமான முடியின் ரகசியம் என்ன தெரியுமா?
Image Credit : instagram
கற்றாழை
முடிக்கு ஹேமா அடிக்கடி யூஸ் செய்யும் ஒரே பொருள் கற்றாழை தானாம். முட்டை வெள்ளைக்கருவில் அல்லது தேங்கா எண்ணெய்யில், வெங்காய சாறில் சேர்த்து தலை முடியில் அப்ளை செய்வாராம்.
Image Credit : instagram
ஹேர் பேக்
வாரம் ஒருமுறை கட்டாயம் இந்த ஹேர் பேக் போட்டு தான் ஹேர் வாஷ் செய்வாராம். வெங்காய சாறு, கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் இவற்றை மிக்ஸியில் நன்கு அரைத்து தலைமுடியில் தடவி மசாஜ் செய்வாராம்.
Image Credit : instagram
சின்ன வெங்காய சாறு
முடி கொட்டிய இடத்தில் மீண்டும் வளர சின்ன வெங்காயத்தை நன்கு அரைத்து, அந்த சாறை மட்டும் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றில் அங்கு ஸ்ப்ரே செய்வாராம். 2 வாரத்தில் முடி வளர தொடங்குமாம்.
Image Credit : instagram
உணவு
ஆரோக்கியமான உணவு மிக மிக அவசியம் என்கிறார். தினமும் பழங்கள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் அதிகம் சாப்பிடுவாராம்.
Image Credit : instagram
சரும பராமரிப்பு
வாரம் ஒருமுறை முகத்திற்கு கடலை மாவுடன் கஸ்தூரி மஞ்சள், தயிர் சேர்த்து முகத்தில் அப்ளை செய்வாராம்.