உடல் எடை அதிகரிக்க குக் வித் கோமாளி சுனிதா என்ன சாப்பிட்டார் தெரியுமா?
Sreeja Kumar
20-07-2023, 18:24 IST
www.herzindagi.com
சுனிதா
விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி மூலம் அறிமுகமான சுனிதா, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனார். ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்த சுனிதா எப்படி ஆரோக்கியமாக உடல் எடை அதிகரித்தார் என்பதை பார்ப்போம்.
Image Credit : instagram
காலை உணவு
காலை உணவு எல்தியாகவும் இருக்க வேண்டும், அதே போல் வெயிட்டும் போட வேண்டும் என்ற நோக்கத்தில் முட்டை சாண்ட்விச் எடுத்து கொள்வாராம். அதாவது முட்டையை வேக வைத்து, அதை மசித்து பிரெட்டில் வைத்து சூடுப்படுத்தி சாப்பிடுவாராம்.
Image Credit : instagram
இரவு உணவு
மதியம் உணவாக குறைவாக சாப்பிட்டு விட்டு, இரவு நேர உணவு வயிறு நிரம்பும் வரை திருப்பிதியாக சாப்பிட்டு விட்டு தூங்குவாராம். இரவில் நன்றாக சாப்பிட்டால் வெயிட் போடுமாம்.
Image Credit : instagram
நட்ஸ்
2 வகையான விதைகள், நட்ஸ், பேரீச்சம் பழம் போன்றவற்றை மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாக எடுத்து கொள்வது சுனிதாவின் வழக்கமாம். இதுவும் உடல் எடை அதிகரிக்க உதவுமாம்.
Image Credit : instagram
நெய்
பட்டர், நெய், சீஸ் போன்ற நல்ல கொழுப்புகளை தினமும் உணவில் சேர்த்து கொள்வாராம் சுனிதா. இவை உடல் எடை அதிகரிகக் பெரிதும் உதவும் என்கிறார் சுனிதா.
Image Credit : instagram
ஸ்மூத்தி
உடல் எடையை அதிகரிக்க உதவும் ஸ்மூத்திகளை பால் அல்லது ஐஸ்கீரிம் சேர்த்து தினமும் எடுத்து கொண்டாராம் சுனிதா. இதுவும் அவரின் வெயிட் கேயின் பயணத்தில் பெரிதும் உதவியதாம்.