11 கிலோ வரை எடையைகுறைக்க நடிகை சமீரா ரெட்டி இருந்த டயட் என்ன தெரியுமா?


Sreeja Kumar
13-07-2023, 16:51 IST
www.herzindagi.com

சமீரா ரெட்டி

    வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் தனி இடம்பிடித்த நடிகை சமீரா ரெட்டி திருமணம், குழந்தைகள் என பிஸியானதும் 92 கிலோ வரை எடை கூடினாராம். பின்பு அதை குறைக்க அவர் என்ன செய்தார் என்பதை இப்போது பார்ப்போம்

Image Credit : instagram

டயட்

    சமீரா ரெட்டி தேர்வு செய்த டயட், இண்டர்மீடியட் ஃபாஸ்டிங். நல்ல ரிசல்ட் கிடைக்க நிச்சயம் இதை ட்ரை செய்யலாம் என்கிறார் சமீரா. நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் சாப்பிடாமல் விரதம் இருப்பாராம்.

Image Credit : instagram

இரவு

    இரவு டின்னர் 7 மணிக்குள் முடித்து விடுவாராம். பின்பு மறுநாள் மதியம் வரை உணவு எடுத்து கொள்ளாமல், பழங்கள், ஜூஸ் , தண்ணீர் மட்டும் தான் குடிப்பாராம். பின்பு மதியம் காய்கறி நிறைந்த ஆரோக்கியமான உணவை சாப்பிடுவாராம்.

Image Credit : instagram

உடற்பயிற்சி

    தினமும் சரியாக 1 மணி நேரம் உடற்பயிற்சிக்காக ஒதுக்கி விடுவாரம். யோகா, வொர்க்கவுட்ஸ் என தினமும் மாறி மாறி செய்வாராம் சமீரா.

Image Credit : instagram

வாக்கிங்

    காலை நேரத்தில் வாக்கிங் உடல் சதையை குறைக்க பெரிதும் உதவியதாம். மறக்காமல் தினமும் காலை 6 மணிக்கு வாக்கி சென்று விடுவாராம் சமீரா.

Image Credit : instagram

11 கிலோ

    இதை சுமார் 6 மாதங்களுக்கு கடுமையாக பின்பற்றி ஆரோக்கியமான முறையில் 11 கிலோ வரை எடையை குறைத்தாராம் சமீரா.

Image Credit : instagram