90ஸ் கிட்ஸ்களால் மறக்க முடியாத பிரபலங்கள்


sreeja kumar
17-02-2023, 16:37 IST
www.herzindagi.com

பெப்ஸி உமா

    சன் டிவியில் ஒளிப்பரப்பான பெப்ஸி உங்கள் சாய்ஸ், 90ஸ் கிட்ஸ்களால் மறக்க முடியாத சின்னத்திரை நிகழ்ச்சி. இதை தொகுத்து வழங்கிய பெப்பி உமாவை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அவரிடம் ஃபோனில் பேச மணி கணக்கில் ஃபோன் லைனில் காத்திருந்த ரசிகர்கள் கூட்டம் இங்கு ஏராளம்.

Image Credit : google

ஸ்வர்ணமால்யா

    துள்ளுவதோ இளமை நிகழ்ச்சியை செம்ம ஸ்டைலாக தொகுத்து வழங்கிய ஸ்வர்ணமால்யா இளைஞர்களின் ஃபேவரெட் ஆங்கர் என்றே சொல்லலாம். உடை, பேச்சு எல்லாவற்றிலும் தனித்துவத்தை காட்டி பலரையும் கவர்ந்தார்.

Image Credit : google

காமெடி டைம் அர்ச்சனா

    சன் டிவியில் ஒளிப்பரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் அர்ச்சனாவை 90ஸ் கிட்ஸ்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். இப்போதும் அர்ச்சனா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். ஆனாலும் சிட்டி பாபுடன் சேர்ந்து கலக்கிய அர்ச்சனா தான் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரெட்.

Image Credit : google

ரத்னா சிவராமன்

    செய்தி வாசிப்பாளர், திரை விமர்சனம் சொல்லும் தொகுப்பாளர் என 90ஸ் கிட்ஸ்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ரத்னா சிவராமன். திரையில் இவர் தோன்றும் போது இருக்கும் குட் வைப், அவரின் மென்மையான பேச்சு, தமிழ் உச்சரிப்பு ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தது.

Image Credit : google

நிவேதா தாமஸ்

    நிவேதா தாமஸ் ’மை டியர் பூதம்’ என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இந்த சீரியலை பார்ப்பதற்காக பள்ளியில் இருந்து வேகமாக ஓடி வந்த காலம் என்றும் மறவாது. இப்போதும் 90ஸ் கிட்ஸ்களுக்கு நிவேதா தாமஸ் என்றால் முதலில் நினைவுக்கு வருவது இந்த சீரியல் தான்.

Image Credit : google

நடிகை செளந்தர்யா

    90ஸ் கிட்ஸ்களால் மறக்க முடியாத ஹீரோயின். பீக்கில் நடித்து கொண்டிருந்த போது விமான விபத்தில் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார். அந்த செய்தியை கேள்விப்பட்டு அழுத ரசிகர்கள் இங்கு எராளம்.

Image Credit : google

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : google