பொடுகுத் தொல்லை பாடாய்ப்படுத்துகிறதா? கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க!


Jansi Malashree V
03-05-2024, 16:23 IST
www.herzindagi.com

    பெண்கள் இதிலிருந்து தப்பிக்கும், தலைமுடியைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றால் கற்றாழையை இப்படி பயன்படுத்திப் பாருங்கள். இதோ முழு விபரம் இங்கே..

கற்றாழை ஜெல்:

    கற்றாழையின் மேல்புறத் தோலை நீக்கி விட்டு, உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து தலையில் தடவும். உடல் சூடு அதிகமாவதால் ஏற்படக்கூடிய பொடுகுத் தொல்லைப் போக்க உதவியாக உள்ளது.

கற்றாழையுடன் வெந்தயம்:

    கற்றாழை ஜெல் மற்றும் வெந்தயத்தை ஊற வைக்கவும். பின்னர் மிக்சியில் பேஸ்ட் போன்று அரைத்து தலையில் அப்ளை செய்யவும்.. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வறண்ட தலைமுடியை சீராக்குவதோடு, பொடுகுத்தொல்லையை நீக்குகிறது.

கற்றாழையுடன் எலுமிச்சை:

    கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து தலையில் அப்ளை செய்யவும். வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் பொடுகுத் தொல்லையிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

    கற்றாழையில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பாக்டீரிய எதிர்ப்புப் பண்புகள் உள்ளதால் தலைமுடியைப் பாதுகாக்க பெண்கள் தாராளமாக உபயோகிக்கலாம்.