உதடு வெடிப்பை போக்கி, பிங்க் நிற உதடுகளை ஒரே வாரத்தில் பெற டாப் 6 குறிப்புகள்


S MuthuKrishnan
28-07-2025, 15:34 IST
www.herzindagi.com

    உதடு வெடிப்பு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும், அது வலியையும் ஏற்படுத்தும். உதடுகளைப் பராமரிப்பதும், எந்த வகையான வறட்சியையும் நீக்க பின்வரும் 5 விஷயங்கள் உங்களுக்கு உதவும்

லிப் பாம் பயன்படுத்தவும்

    அதிக எண்ணெய் பசை இல்லாத, ஆனால் உதடுகளுக்கு ஈரப்பதத்தை அளித்து, உதட்டுச் சுருக்கங்களைத் தடுக்கக்கூடிய லிப் பாம் பயன்படுத்துவது முக்கியம்.

நிறைய தண்ணீர் குடிக்கவும்

    நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்வது உதடுகளின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் உதவும். நிறைய தண்ணீர் உட்கொள்ளல் இயற்கையாகவே உதடுகளின் வளர்ச்சி குறையும்.

அவ்வப்போது எக்ஸ்ஃபோலியேட் செய்யவும்

    முகத்தின் மற்ற பகுதிகளைப் போலவே உதடுகளின் உலர்ந்த செதில்களை அகற்ற உதடுகளுக்கும் உரித்தல் தேவைப்படுகிறது. மென்மையான பல் துலக்கும் பிரஸ்ஸை பயன்படுத்தி இதனை மெதுவாகச் செய்யுங்கள். வெட்டுக்கள் மற்றும் இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுக்க பிரஸ்ஸை ஈரமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

உதடுகளை நக்க கூடாது

    பலருக்கு உதடுகளை நக்கும் மற்றும் கடிக்கும் பழக்கம் உள்ளது, இது உதடுகள் வறண்டு போக வழிவகுக்கும். இதனை செய்வதை தவிர்ப்பதன் மூலம் உதடுகளில் உள்ள வறட்சி,வெடிப்பு நீங்குவதுடன் உதடுகளும் பிங்க் நிறத்தில் இருக்கும்.

தேங்காய் எண்ணெய்

    உங்கள் உதடுகளில் உள்ள வெடிப்பு வறட்சி குறைய மேலும் உங்கள் உதடை நன்கு பராமரிக்க தேங்காய் எண்ணெயை அவ்வப்போது உங்கள் உதடுகளில் தடவி வாருங்கள்

வெண்ணைய்

    அதிகப்படியான வறட்சி உள்ள உதடுகளுக்கு வெண்ணையை சிறிதளவு எடுத்து உதடுகளின் மீது தடவி வருவதால் வறட்சி குறையும்