லிப் பாம் தீந்து போச்சா? இந்த சமையலறை பொருட்களையே லிப் பாமாக பயன்படுத்தலாம்!


Alagar Raj AP
08-07-2024, 16:56 IST
www.herzindagi.com

    வீட்டில் லிப் பாம் தீந்து போச்சு அவசரத்துக்கு வாங்க முடியலன்னு கவலைப்படாதீங்க, நாங்கள் சொல்லும் இதில் ஏதேனும் ஒரு சமையலறை பொருளை நீங்கள் லிப் பாமாக பயன்படுத்தலாம்.

ஆலிவ் ஆயில்

    ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கண்டிஷனிங் பண்புகள் நிறைந்திருக்கும் ஆலிவ் ஆயில் உங்கள் உதடுகள் வறட்சி மற்றும் வெடிப்புகளை நீக்கி மென்மையான மிருதுவான தோற்றத்தை அளிக்கும்.

பாதாம் எண்ணெய்

    பாதாம் எண்ணெயில் நிறைந்துள்ள வைட்டமின் ஈ மற்றும் இயற்கையான ஆக்ஸிஜனேற்றம் புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்தில் இருந்து உதடுகளை பாதுகாக்கிறது. மேலும் உதடுகளின் இயற்கையான நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

தேங்காய் எண்ணெய்

    தேங்காய் எண்ணெயின் இயற்கையான கொழுப்பு அமிலங்கள் உதடுகளை ஊட்டமளித்து ஈரப்பதமாக வைத்திருக்கும்.

கோகோ வெண்ணெய்

    கோகோ வெண்ணெயில் ஈரப்பதம் நிறைந்த பைட்டோ செர்னிகல்ஸ் உள்ளது, இது உதடுகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது.

ஷியா வெண்ணெய்

    ஷியா வெண்ணெயில் இருக்கும் வைட்டமின் ஏ, பி உதடுகளை ஊட்டமளித்து ஈரப்பதமாக வைத்திருக்கும்.

ஜொஜோபா எண்ணெய்

    ஜொஜோபா எண்ணெயின் வைட்டமின் ஏ, பி வறண்ட உதடுகளில் ஈரப்பதத்தை அளித்து மென்மையாக வைக்கும்.