நகங்களை வேகமாகவும் வலுவாகவும் வளர செய்யும் 7 சிறந்த உணவுகள்!


Alagar Raj AP
05-06-2024, 15:51 IST
www.herzindagi.com

    சருமம் மற்றும் கூந்தலை அழகு படுத்துவது போல் நகங்களை பராமரிப்பது அழகு முறையின் மிக முக்கியமான பகுதியாகும். உங்களுக்கு பிடித்த மாதிரி நகங்களை அழகுபடுத்த அதற்கு நகங்கள் வேகமாகவும், வலுவாகவும் வளர வேண்டும். எனவே இந்த பதிவில் நகங்களை வேகமாகவும், வலுவாகவும் வளர செய்யும் உணவுகள் குறித்து காண்போம்.

தக்காளி

    இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி குறைபாடு நகங்களை உடையக்கூடியதாக மாற்றும், எனவே தக்காளியில் நிறைந்துள்ள வைட்டமின் சி நகங்களை வலுவாக மாற்றும்.

கேரட்

    கேரட்டில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இவற்றை பச்சையாக சாப்பிடுவதால் வலுவான மற்றும் பளபளப்பான அழகான நகங்களை வளர செய்யும்.

வாழைப்பழம்

    நகங்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாக இருக்கும் பயோட்டின் வாழைப்பழத்தில் உள்ளது. இது உங்கள் நகங்களை வலுவாகவும் ஆரோக்கியமானதாகவும் மாற்றும்.

ஓட்ஸ்

    ஓட்ஸில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி நகங்களை வலுவூட்டவும், ஆரோக்கியமாகவும் மாற்ற உதவுகின்றன.

முட்டை

    வாழைப்பழத்தை போல் முட்டையிலும் பயோட்டின் உள்ளது. மேலும் இதிலுள்ள புரதங்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நகங்களுக்கு ஈரப்பதம் அளித்து பளபளப்பாக வைக்க உதவுகிறது.

அக்ரூட் பருப்பு

    அக்ரூட் பருப்பில் உள்ள ஒமேகா அமிலங்கள் உங்கள் மந்தமான நகங்களுக்கு தேவையான புத்துயிர் அளித்து பளபளப்பை அதிகரிக்கும்.