காமாட்சி அம்மா சிவனை மணக்க மணலில் சிவலிங்கத்தை உருவாக்கி, ஊசி முனையில் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்து, சிவபெருமானை மணந்ததாக வரலாறு கூறப்படுகிறது. இது போல வேறிடங்களில் அம்மனுக்கு தனித்துவமான ஆலயங்கள் கிடையாது. காமாட்சியில் அம்மன் "பரப்ரஹ்ம ஸ்வரூபினி" என்று வணங்கப்படுகிறார். காமாட்சியில் அம்மனை பக்தர்கள் ஆழ்ந்து பிரார்த்தனை செய்யும் போது முகத்தை தீர்க்கமாகத் தரிசிப்பவர்களுக்கு, அம்மனின் கண்கள் சிமிட்டுவது போன்றதான உணர்வினை ஏற்படுத்தக்கூடிய புனித ஸ்தலமாகக் கருதப்படுகிறது.
காஞ்சி காமாட்சி அம்மனின் தோற்றம்
கருவறையில், காமாட்சி அம்மன் அமர்ந்திருக்கும் தோரணையில் அருள்பாலிக்கிறார். இந்த தோரணை பத்மாசன தோரணை என்று அழைக்கப்படுகிறது. ஒரு கையில் கரும்பு, வில், மற்றொரு கையில் தாமரை, கிளி ஏந்தி, அன்னை காமாட்சி அமர்ந்திருப்பதைப் பார்க்க காணக் கண் ஆயிரம் வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அம்மனின் நெற்றியில் சந்திரன் போன்ற அமைப்பு இருக்கும். அம்மன் சிலைக்கு சற்று முன்பு ஒரு ஸ்ரீ சக்கரம் வைக்கப்பட்டு அதற்கு உரிய வழிபாடு செய்யப்படுகிறது. காமாட்சி அம்மன் ஆரம்பக் காலத்தில் உக்ர ஸ்வரூபினியாக காட்சி அளித்தார். பின்னர் ஆதி சங்கராச்சாரியார் அம்மனுக்கு முன் ஒரு சக்கரத்தை வைத்து, அவலை சாந்த ஸ்வரூபினியாக மாற்றினார் என்று கூறப்படுகிறது.
காமாட்சி கோயிலில் நடத்தப்படும் திருவிழாக்கள்
சிவன் மற்றும் காமாட்சி அம்மன் திருமணம் பிப்ரவரி/மார்ச் மாதங்களில் வரும் பால்குண மாதத்தில் கொண்டாடப்படுகிறது. திருமணம் செய்து கொள்ள இருக்கும் நம்பதிகள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள். பிரம்மோத்சவம் மாதத்தில் காலையிலும் மாலையிலும் அம்மனின் உற்சவர் சிலை மக்களுக்கு அருள்பாலிக்க வலம் வருகிறார் . திருவிழாவின் 4வது நாளில் தங்க சிங்கத்தின் மீது காட்டி அளிப்பார், 9வது நாளில் வெள்ளி ரதத்தில் சவாரி செய்கிறார். மேலும், திருவிழாவின் 10வது மற்றும் இறுதி பௌர்ணமி நாளில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. அதேபோல் மாதந்தோறும் வரும் பௌர்ணமியில் அம்மனுக்கு விசேஷமான பூஜைகள் செய்யப்படுகிறது.
தினமும் கோ பூஜைக்குப் பின்னரே அன்றாட ஆலய பணிகள் துவங்குகிறதாம். தேவி சக்தியின் வடிவமானவள்,எப்பொழுதும் தேவியை மனதார நினைத்து வழிப்பட்டு வந்தால், அவள் நம் கைப்பிடித்து நல்வழிக்காட்டுவால்.
மேலும் படிக்க: தலைவலியைக் குறைக்க வீட்டில் எளிதாக பயன்படுத்தக்கூடிய வாஸ்து குறிப்புகள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation