
ஆந்திரா மாநிலத்தில் அரசு பள்ளி மாணவிகள் சரளமாக அமெரிக்க ஆங்கிலம் பேசும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை பார்க்கும்போது, நமக்கே ஆங்கிலம் சரளமாக பேச வேண்டுமென ஆர்வம் வரும்.
எப்போதுமே உங்களுடைய பிள்ளைகளுக்கு தாய் மொழி அல்லாமல், இன்னொரு மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக தமிழ் மொழிக்கு பிறகு, பெரும்பாலும் ஆங்கிலத்தை கற்றுக்கொடுக்கவே பல பெற்றோர்களும் விரும்புவர். உங்களுடைய பிள்ளைகள் வெளியாட்களிடம் ஆங்கிலத்தில் சரளமாக பேசும்போது மிகவும் பெருமையாக இருக்கும். ஆனாலும், ஒரு சில பிள்ளைகள் ஆங்கிலம் பேச மிகவும் சிரமப்படுவர். அவர்களின் குறைவான ஆங்கில ஆற்றலை பார்த்து பெற்றோர்கள் வருத்தப்படுவதும் உண்டு. அவர்களுள் நீங்களும் ஒருவர் எனில், நிச்சயம் இந்த பதிவின் மூலமாக உங்கள் பிள்ளைகளின் ஆங்கில திறனை வளர்க்கலாம்.

அவர்கள் ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ளும்போது, கேலி செய்வதற்குரிய வகையில் தவறுகள் செய்வதுண்டு. அந்த தவறுகளை பெரிதுபடுத்தாதீர்கள். நீங்கள், அவர்கள் செய்யும் தவறுகளை சொல்லி கேலி செய்யும்போது, கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவர்களுக்கு குறையும்.

அனுபவமே அருமையான ஆசான். அவர்களுக்கு பல்வேறு வகையான மாதிரி தேர்வுகளை வைத்து, அவர்களின் ஆங்கில ஆற்றலை வளர்க்க உதவவும். அவர்கள் ஆங்கிலத்தில் பேசினால் ஊக்குவிக்கவும். அதேபோல, சரளமாக ஆங்கிலம் பேச, டைமர் உதவியுடன் அவர்களை பேச செய்யலாம்.

அவர்கள் பேசும்போது, அதனை அலட்சியப்படுத்தாமல் கவனமாக கேட்கவும். இதனால் அவர்களின் கற்றுக்கொள்ளும் ஆர்வம் என்பது பல மடங்கு நிச்சயம் அதிகரிக்கும்.

அவர்கள் சரியாக பேசும்போது, அதனை மகிழ்ச்சியோடு கொண்டாடி ஊக்குவிக்கவும். அவர்களுக்கு பயனுள்ள பரிசுகளையும் நீங்கள் வழங்கலாம்.
இந்த 4 டிப்ஸை நீங்களும் முயன்று பாருங்கள். நிச்சயம், உங்கள் பிள்ளைகளின் ஆங்கிலம் பேசும் ஆற்றல் பண்மடங்கு உயரும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com