april fools day celebration

April Fools day : வருஷா வருஷம் ஏமாத்துறாங்களே! ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினமாக கொண்டாட்டம் ஏன் ?

பள்ளி பருவத்தில் இருந்து கல்லூரி வரை முட்டாள்கள் தினத்தன்று நாம் ஒருவரை ஏமாற்றி விளையாடி இருப்போம். ஆனால் எதற்காக தெரியுமா ? விவரத்தை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
Editorial
Updated:- 2024-04-01, 20:35 IST

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முட்டாள்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. முட்டாள்கள் தினம் எப்போது தோன்றியது, பின்னணி மற்றும் அதன் வரலாறு இன்று வரை விவாத பொருளாகவே இருக்கிறது. ஒருவரையொருவர் ஏமாற்றி குறும்பு செய்வது அல்லது நக்கல் அடிப்பது போன்ற செயல்களுக்காக முட்டாள்கள் தினம் அறியப்படுகிறது. ஆனால் இந்த நாள் தோன்றியதற்கும் நாம் ஒருவரை ஏமாற்றி முட்டாள் ஆக்குவதற்கும் என்ன காரணம் என உங்களுக்கு தெரியுமா ? முழு விவரங்களை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

april fool day significance

முட்டாள்கள் தினம் எதற்காக ?

இந்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி திங்கள்கிழமை முட்டாள்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒருவரிடம் புரளி, வதந்தி, பொய் ஆகியவற்றை கூறி அவர்களை குறும்புத் தனமாக ஏமாற்றி முட்டாள் ஆக்கும் தினமாக ஏப்ரல் ஒன்றாம் தேதி அமைகிறது. ஏமாற்றிய பிறகு அந்த நபர் அதை உணர்வதற்குள் ஏப்ரல் ஃபூல் என்று கத்தி இன்று முட்டாள்கள் தினம் என கூறி பார்த்திருப்போம். இந்த ஏப்ரல் ஃபூல் குறும்பு பல ஆண்டுகளாக தொடர்கிறது.

முட்டாள்கள் தினத்தின் வரலாறு

முட்டாள்கள் தினம் மேற்கத்திய நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மதச்சார்பற்ற விடுமுறை நாட்களில் ஒன்றாகும். குழந்தை பருவத்தில் இது மிகவும் சகஜமானது. பள்ளியில் படிக்கும் போது நாமும் ஒருவரை ஏமாற்றி ஏப்ரல் ஃபூல் செய்திருப்போம். முட்டாள்கள் தினம் எவ்வாறு தோன்றியது என்ற விவரம் எங்கும் கிடைக்கப்பெறவில்லை. 1708ம் ஆண்டு வெளியான பிரிட்டனின் அப்போலோ பத்திரிக்கையின் தகவல்படி முட்டாள்கள் தினம் பாரம்பரியம் கொண்டது என ஊர்ஜிதம் ஆகிறது.

முட்டாள்கள் தினத்தின் முக்கியத்துவம்

முட்டாள்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும் இந்தியா உட்பட பல நாடுகளில் இதற்கு விடுமுறை அளிக்கப்படுவதில்லை. உங்கள் நண்பர்களை ஏமாற்றி குறும்பு செய்து வேடிக்கையாக விளையாடுவதற்கான நாட்களில் இதுவும் ஒன்று. இந்த நாளில் யாராவது சோகமாக இருந்தால் கூட அவர்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்க குறும்புகள் செய்யலாம். இதனால் இருவருக்கும் நேர்மறை ஆற்றல் கிடைக்கிறது.

முட்டாள்கள் தினம் கொண்டாட்டம்

இந்தியாவை காட்டிலும் மேற்கத்திய நாடுகளில் முட்டாள்கள் தினம் பிரபலமாக உள்ளது. குஷி படத்தில் வருவது போல் நீங்கள் அபாயகரமான விஷயங்களை செய்து ஒருவரை ஏமாற்ற வேண்டும் என அவசியம் இல்லை. உதாரணமாக பிரான்ஸில் சிறுகுழந்தைகளை தங்கள் நண்பர்களுக்கு பேப்பரில் வால் கட்டி விட்டு உனக்கு வால் வளர்ந்திருப்பதாக கிண்டல் செய்வார்கள்.

ஒருவரை ஏமாற்றும் போது அவர்களின் மனநிலையை அறிந்து ஏமாற்றுங்கள். ஏனென்றால் அவர்கள் திடீரென கோபத்தில் கன்னத்தில் அறைந்து விட்டால் உங்களுக்கு வலிக்கும் அல்லவா ?  இந்த வரிகள் உங்களை ஏமாற்றுவதற்காக எழுதப்பட்டது. முட்டாள்கள் தின வாழ்த்துகள்! கன்னத்தில் அறையும்படி வந்து நீங்கள் கண்களை மூடும் போது அவர்களும் ஏப்ரல் ஃபூல் சொல்லலாம்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com