christmas holiday tips

Holiday healthy tips: விடுமுறைக் காலத்தில் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிந்து பாதுகாப்போடு செல்வது நல்லது.
Editorial
Updated:- 2023-12-15, 22:33 IST

விடுமுறை வந்தாலே கொண்டாட்டங்களுக்கும் பஞ்சம் இருக்காது. தற்போது நடைபெறும் தேர்வுக்கு ஒருபுறம் மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்தாலும், வரவிருக்கும் விடுமுறை நாள்களில் என்ன செய்யலாம்? எனவும் யோசிக்கத் தொடங்கியிருப்பார்கள். குளிர்காலத்தில் வரக்கூடிய விடுமுறை காலத்தை எப்படி ஆரோக்கியமாக கொண்டாட வேண்டும்? குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் சொல்லக்கூடிய அறிவுரைகள் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

christmas holiday 

மேலும் படிக்க:  வைட்டமின் சி நிறைந்த பீட்ரூட்! உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது  

விடுமுறைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:

நிறைய தண்ணீர் குடித்தல்:

  • விடுமுறைக் காலத்தில் நாள் முழுவதும் குழந்தைகள் விளையாடிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். தாகம் எடுத்தாலும் விளையாட்டு குஷியில் தண்ணீரைக் குடிக்க மாட்டார்கள். இந்த நேரத்தில் பெற்றோர்கள் கண்டிப்புடன் இருக்க வேண்டும். 
  • குளிர்ந்த குளிர்கால மாதங்களில் கூட உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். எனவே அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இதோடு ஜுஸ், சோடா போன்றவற்றையும் அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.

உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள்:

  • நம்மில் பலர் விடுமுறை நாள்களில் வழக்கமான செயல்பாடுகளுக்கு நேரம் ஒதுக்க மாட்டோம். இதனால் பல உடல் நலப்பிரச்சனைகளும் உங்களுக்கு ஏற்படும்.
  • தினசரி உடற்பயிற்சிகள் உங்களது உடலுக்கு நன்மைச் சேர்க்கும் என்பதால், நடைப்பயிற்சி, ஸ்கிப்பிங், யோகா போன்ற உடல் செயல்பாடுகளுக்கு முன்னுமைக் கொடுக்கவும். இது நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவியாக இருக்கும்.

உணவினால் பரவும் நோய்:

  • ஒவ்வொரு ஆண்டும் 48 மில்லியன் மக்களுக்கு உணவினால் பல்வேறு நோய்கள் பரவுவதாக ஆய்வுகள்தெரிவிக்கின்றன. அதிலும் விடுமுறை நாள்கள் என்றால், எண்ணெய் பலகாரங்கள் முதல் தேவையற்ற உணவுப் பொருள்களை அதிகளவில் சாப்பிடுவோம். இதனால் பல உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
  • எனவே ஆரோக்கிய உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டும். சமைக்கும் முன்னர் பாத்திரங்களை நன்றாக சுத்தம் செய்வது நல்லது. 

மேலும் படிக்க: குளிர்காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய இந்திய பழங்களின் லிஸ்ட்! 

உங்கள் கைகளை அடிக்கடி கழுவுதல்: 

healthy tips..

விடுமுறை நாள்கள் என்றாலே நாள் முழுவதும் உற்சாகத்துடன் விளையாட வேண்டும் என்று தான் நினைப்போம். இதனால் தொற்று கிருமிகள் அதிகளவில் பரவக்கூடும். எனவே விளையாடி முடித்து வீட்டிற்கு வருவதற்கு முன்னதாக கைகளை நன்றாக கழுவ வேண்டும். இதன் மூலம் கிருமிகள் பரவுவதைத் தடுக்க முடியும்.

பாதுகாப்போடு இருத்தல்:

  • டிசம்பர் மாத்தில் வரக்கூடிய விடுமுறை நாள்களில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் இருக்கும். இந்த நாள்களில் உறவினர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால், பாதுகாப்போடு செல்வது நல்லது.
  • தற்போது ஆங்காங்கே தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால், மாஸ்க் அணிந்து செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளவும். 
  • பண்டிகைக் காலங்களில் வீட்டில் அலங்காரங்கள் செய்ய திட்டமிட்டிருந்தால் உங்களைக் குழந்தைகளை அடிக்கடி கண்காணித்துக் கொள்ளுங்கள். 

 

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com