மிதுன ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டு நிச்சயமாக மாற்றங்களை கொடுக்கும். வாய்ப்புகளும், உரிய அங்கீகாரமும் கிடைக்கும். மே மாதம் வரை 12ஆம் வீட்டில் உள்ள வியாழன் உங்களை புதிய வாய்ப்புகளை ( வெளிநாடு ) நோக்கி நகர்த்தும். வழக்கத்திற்கு மாறாக எல்லைகளை விரிவுபடுத்துங்கள். செலவுகளும் அதிகரிக்கும். மே மாதத்திற்கு பிறகு வியாழன் ஒன்றாம் வீட்டிற்கு வருவதால் வெற்றி, நற்பெயர் கிடைக்கும். நம்பிக்கையுடன் பயணிப்பீர்கள்.
12ஆம் வீட்டின் தாக்கத்தால் உறவில் தற்காலிக விலகல் தேவை. தனிப்பட்ட வளர்ச்சிக்காக இதை சுயபரிசோதனைக்கான நேரமாக எடுத்துக் கொள்ளுங்கள். மே மாதத்தின் மத்தியில் வியாழன் ஒன்றாம் வீட்டிற்கு பெயர்வதால் நம்பிக்கை அதிகரிக்கும். புதிய உறவுக்கு வாய்ப்பும் உண்டு. ஏற்கெனவே உறவில் இருந்தால் அது கூடுதல் வலுப்பெறும்.
2025ன் முதல் பாதியில் வாய்ப்புகளும், சவால்களும் சமமாக இருக்கும். மே மாதம் வரை வியாழன் 12ஆம் வீட்டில் தொடர்வதால் அதிகமாக செலவு செய்வீர்கள். எனினும் தொழில் முன்னேற்றத்திற்காக வெளிநாடு செல்லும் திறன் உங்களுக்கு உண்டு. மார்ச் 29ஆம் தேதி பத்தாவது வீட்டில் சனி வருவதால் வெற்றிகள், வாய்ப்புகள் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும்.
வருடத்தின் முதல் பாதியில் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. 12ஆம் வீட்டில் வியாழன் காரணமாக மன அழுத்தம் அல்லது சோர்வு ஏற்படும். எனவே தேவையான அளவு ஓய்வு எடுக்கவும். உணவுமுறையில் கவனம் செலுத்துங்கள். மே மாதத்தின் மத்தியில் ஒன்றாம் வீட்டில் வியாழன் வருவதால் ஆரோக்கியம் மேம்படும். ஆண்டின் இரண்டாம் பாதியில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
உங்களுடைய தனிப்பட்ட உறவு வளரும் நிலையில் இருக்கும். தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துவதன் காரணமாக 12ஆம் வீட்டின் தாக்கம் உறவில் சுயபரிசோதனைக்கு வழிவகுக்கும்.
ஆண்டின் முதல் பாதியில் வாய்ப்புகளும், சவால்களும் சமமாக இருக்கும். செலவினங்கள் அதிகமாகும். எனினும் தொழில் முன்னேற்றதிற்கான சாத்தியம் உண்டு. வழக்கத்திற்கு மாறான முயற்சிகளும் பயன் தரும்.
ஆண்டின் முதல் பாதியில் உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. 12ஆம் வீட்டில் உள்ள வியாழனால் மன அழுத்தம் அல்லது சோர்வு உண்டாகும்.
மே, ஜூன், செப்டம்பர்
ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல்
கிசு கிசு மனநிலை, சோம்பேறித்தனம்
2025ஆம் ஆண்டிற்கான உங்களுடைய ராசிப்பலன்களை தெரிந்து கொள்ள ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com