வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது துடைப்பம் தான். துடைப்பம் இல்லாமல் வீடுகளை சுத்தம் செய்வது முழுமையடையாது. வீட்டை தினசரி சுத்தம் செய்வதை உறுதி செய்வதற்கான மலிவான மற்றும் எளிதான வழிகளில் இதுவும் ஒன்றாகும். இவற்றில் புதிய துடைப்பத்தில் இருக்கும் உமிகளை சுத்தம் செய்வது சவாலான ஒன்றாகும். இவற்றை சமாளிக்க ஒரு புத்திசாலித்தனமான தீர்வை கண்டுபிடித்துள்ளோம்.
முதலில் புதிய துடைப்பத்தை மொட்டை மாடிக்கு அல்லது உங்கள் வீட்டிற்கு வெளியே எடுத்துச் செல்லுங்கள்.அதன்பிறகு துடைப்பத்திற்கு மேல் கயிற்றால் கட்ட வேண்டும்.
கட்டிய பின் சுவர் அல்லது தரையில் மெதுவாக அடிக்க வேண்டும்.
அப்படி செய்வதால் துடைப்பத்தில் உள்ள அனைத்து உமிகளும் அகற்றி சுத்தம் செய்வதை எளிதாக்கும்.
நிலத்தில் தட்டும் போது துடைப்பத்தின் இலைகள் மற்றும் குச்சிகள் வெளியே வராதவாறு கட்டப்பட்ட கயிறு உறுதி படுத்தும்.
Image Credit: Freepik
விளக்குமாறு சுத்தம் செய்ய உங்களுக்கு சீப்பு அல்லது துணி தூரிகை தேவைப்படும்.
விளக்குமாறு தலைகீழாகப் பிடித்துக்கொண்டு சீப்பை வைத்து கீழ் நோக்கி சீவ வேண்டும்.
இப்படி செய்தால் துடைப்பத்தில் இருக்கும் உமிகள் நீங்கும், மேலும் வீட்டை சுத்தம் செய்ய உங்களுக்கு ஒரு புதிய விளக்குமாறு கிடைக்கும்.
மேலும் படிக்க: மெத்தையில் படிந்திருக்கும் துர்நாற்றத்தை போக்கி நல்ல நறுமணத்தை தரும் வீட்டு ஸ்ப்ரே
உங்களுக்கு நேரம் இருந்தால் புதிய துடைப்பத்தில் இருந்து உமிகளை சுத்தம் செய்ய தண்ணீரை பயன்படுத்தலாம்.
புதிய விளக்குமாறுவை தண்ணீரில் நிரம்பிய வாளியில் ஊறவைக்கவும்.
சுத்தமான தண்ணீரில் 3 முதல் 4 முறை இப்படி செயல்முறை செய்யவும்.
துடைப்பத்திலிருந்து உமிகளை நீர் பிரித்தெடுக்கும்.
இப்போது விளக்குமாறு நேரடியாக சூரிய ஒளியில் உலர வைக்கவும்.
Image Credit: Freepik
புதிய துடைப்பம் முழுவதும் 5-6 சொட்டு தேங்காய் எண்ணெயை போடவும்.
அதன்பிறகு துடைப்பத்தை கைகளால் தேய்த்து ஒன்று அல்லது இரண்டு முறை தரையில் தட்ட வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம், மீதமுள்ள உமி அனைத்தும் அகற்றப்படும்.
இதற்குப் பிறகு, உமியை அகற்றாமல் உங்கள் வீட்டை எளிதாக துடைக்கலாம்.
மேலும் படிக்க: அதிகம் அழுக்கு படிந்த பட்டு தலையணையைச் சுத்தம் செய்ய எளிய வழிகள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com