நீங்கள் எப்போதும் சோர்வாக உணர்கிறீர்களா?
முகம் மஞ்சள் நிறத்தில் உள்ளதா?
உங்கள் வறண்ட சருமம் உங்கள் முக அழகை கெடுக்கிறதா?
முக்கியமான அலுவலக சந்திப்புகளில் கலந்து கொள்ள விடாமல் தலைவலி வந்து தடுக்கிறதா?
ஜாக்கிரதை! இது இரும்புச்சத்து குறைபாட்டைக் குறிக்கும் அறிகுறிகளாகும். ஆம், இரும்புச்சத்து குறைபாடு இந்திய பெண்களில் பெரும்பாலானோருக்கு உள்ளது. இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் அளவுகள் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பலரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது.
உங்களுக்கு இரும்புச் சத்துக் குறைபாடு இருந்தால், அதை சரி செய்ய நீங்கள் அலோபதி அல்லாத வேறு வழிகளைத் தேடிகிறீர்கள் என்றால், ஆயுர்வேதம் உங்களுக்குக் கைகொடுக்கும். ஆம், இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ஆயுர்வேதம் ஒரு வரப்பிரசாதம். இந்த பதிவில், ஆயுர்வேத மருத்துவர் ரேகா ராதாமணி அவர்கள் இரும்புச்சத்து குறைபாட்டைப் போக்க உதவும் ஆயுர்வேத வழிகளை நமக்கு கூறுகிறார்.
உடலில் முக்கியமான தாதுவான இரும்புச்சத்து பற்றாக்குறையால் நமக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதற்கான பொதுவான காரணங்கள் குறைந்த அளவில் இரும்புச்சத்து உட்கொள்ளல், குடல் அழற்சி நோய் (IBD), மாதவிடாய் நாட்களில் அதிக உதிரப்போக்கு ஏற்படுதல், உட்புற இரத்தப்போக்கு ஆகியவை ஆகும்.
மூச்சுத் திணறல், சோர்வு, சரும வெளுப்பு, தலைவலி, தலைச்சுற்றல், வறண்ட மற்றும் சேதமடைந்த சருமம் மற்றும் தலைமுடி, வீங்கிய நாக்கு, நெஞ்செரிச்சல், எளிதில் உடையக்கூடிய நகங்கள் ஆகியவை இரும்புச்சத்து குறைபாடின் அறிகுறிகளாகும். இரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதமான ஹீமோகுளோபினை உருவாக்க உடலுக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது, இது உடல் முழுவதும் ஆக்சிஜனைக் கொண்டு செல்ல செல்களுக்கு உதவுகிறது.
உடலில் ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால், திசுக்கள் மற்றும் தசைகள் திறம்பட செயல்பட போதுமான ஆக்ஸிஜனை பெறாது, இதை இரத்த சோகை என்றும் கூறலாம்.
இரத்த சோகை உடல் வெப்பநிலையின் சமநிலையை தடுக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆயுர்வேதத்தில் இரத்த சோகை பாண்டு (Pandu) என்று அழைக்கப்படுகிறது. இது உங்கள் ஹீமோகுளோபின் எண்ணிக்கையையும் குறைக்கிறது. இரத்த சோகைக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது இதயம் மற்றும் நுரையீரலைப் பாதிக்கும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். கவலைப்பட வேண்டாம், இந்த பிரச்சனைக்கு ஆயுர்வேதம் மூலம் தீர்வு காணலாம்.
வைட்டமின்-C, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் நெல்லிக்காய் ஒரு சிறந்த உணவாகும். இதில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், இரத்த சோகையை குணப்படுத்தும். ஊறுகாய், மிட்டாய் உள்ளிட்ட பல்வேறு விதங்களில் இதை சாப்பிடலாம். நெல்லிக்காயை வேகவைத்து அல்லது பச்சையாக கூட சாப்பிடலாம். தினமும் ஒரு நெல்லிக்காய் சப்பிடுவது இரத்தத்திற்கும் உடலுக்கும் அதிசய பலன்களைத் தரும்.
திராக்ஷாரிஷ்டம் என்பது உலர் திராட்சையை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு திரவ ஆயுர்வேத தயாரிப்பாகும். நன்மை தரும் திராட்சை மற்றும் இரத்தத்திற்கு ஊட்டமளிக்கும் அல்லது இரத்தத்தை மெலிதாக்கும் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட திராக்ஷாரிஷ்டம் இரும்புச்சத்து குறைபாடான இரத்த சோகையை போக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: இருபது மிலி நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் குடித்து வர தொப்பை குறையும், இளமை பெருகும்!!!
பெரும்பாலான உலர் பழங்களில் இரும்புச்சத்து உள்ளது. குறிப்பாக உலர் திராட்சைகளில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன, அவை இரத்த அணுக்களின் உருவாக்கத்திற்கு தேவையானவை. எட்டு முதல் பத்து உலர் திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் சாப்பிடுவது, இரத்த ஆரோக்கியத்திற்கு நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: உங்களுக்கு ஆரோக்கியம் மற்றும் அழகு என இரண்டையும் அள்ளித்தரும் தக்காளி ஜூஸ் பற்றி அறிவீரா!!!
இரத்த சோகையை எதிர்த்துப் போராட ஒரு பாரம்பரிய தீர்வாக சுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின்-C மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. இதன் விளைவாக, உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது. மேலும், இது நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துதல், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுதல் மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்தல் போன்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com