Fenugreek Seeds Water : வெந்தய நீர் குடிப்பதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

எடை குறைப்பு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை போக்க வெந்தய நீரை குடிக்கலாம். இதனை செய்வதற்கான சரியான நேரம் எது? எப்படி பயன்படுத்துவது? வாருங்கள் பார்ப்போம்

health water fenugreek tips
இன்றைய நாளில், மக்களின் வாழ்க்கை முறை மிகவும் மோசமாகிவிட்டதால், தினமும் ஏதாவது ஒரு நோய் வந்துகொண்டே இருக்கிறது. இதிலும், பெரும்பாலானோர் மலச்சிக்கல் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றால் சிரமப்படுகிறார்கள், இருப்பினும் இதற்கு சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவை உங்களுக்கு உதவும். உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு, மலச்சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சனைகளையும் குறைக்கும் என்பதால் பலர் வெந்தயத்தை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்.
ஆனால் எந்தவொரு பலனும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. இதற்கு காரணம், எப்போது சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிட வேண்டும் என்பதை அவர்கள் அறியாதது தான். வெந்தயம் சாப்பிட வேண்டிய நேரத்தையும், எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் இப்போது பார்ப்போம். இதனால் உங்களுக்கு பலன் கிடைக்கும். PSRI மருத்துவமனையின் பொறுப்பாளர், உணவியல் நிபுணர் டாக்டர் டெப்ஜானி பானர்ஜி இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்கிறார்

எடை இழப்புக்கு வெந்தய தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்?

காலையில் முதலில் சாப்பிடும் உணவால், உங்களின் எடை அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏன் அப்படி? இதற்கு காரணம் என்னவென்றால், வயிறு காலியாக இருக்கும் இந்த நேரத்தில், சத்தானவற்றை நாம் சாப்பிடவும், குடிக்கவும் வேண்டும். அப்போது தான் அது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவும். வெந்தயத் தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பது உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்வதோடு, எடையைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது உங்களை நீண்ட நேரம் பசி இல்லாமல் வைத்திருக்கும், இது நீங்கள் அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது.
fenugreek

வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் மற்ற நன்மைகள்

வெந்தய நீர் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு காணலாம். இது செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. வெந்தயத்தில் நார்ச்சத்து உள்ளது, இது குடல் இயக்கத்திற்கு உதவுகிறது, இது தவிர, வெந்தய நீரில் செரிமான நொதிகள் உள்ளன, அவை உணவை எளிதில் ஜீரணிக்க செய்கின்றன. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்க இது உதவுகிறது.வெந்தயத் தண்ணீரைக் குடிப்பதால் கெட்ட கொழுப்பு குறைகிறது. இது தவிர, வெந்தய நீர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றை போக்க உதவுகிறது.வெந்தய தண்ணீரைத் தொடர்ந்து குடிப்பதால், உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்கள் நீங்கும். சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளைத் தடுக்கவும் இது உதவலாம்.

வெந்தய தண்ணீரை எப்படி குடிப்பது?

இரண்டு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து, ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்க விடவும். வெந்தயத்தின் நிறம் மாறும் வரை தண்ணீரைக் கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு, இந்த தண்ணீரை வடிகட்டி ஆறவிடவும். சிறிது வெதுவெதுப்பாக இருக்கும் போது, எலுமிச்சை மற்றும் ருசிக்காக சிறிதளவு தேன் சேர்த்து, அதே சமயத்தில் குடிக்கவும். இது தவிர, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.
வெந்தய நீரைக் குடிக்கும்போது இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் எந்த பிரச்சனைக்காகவும் வெந்தய தண்ணீரை குடிக்கும்போது, சிறிய அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும். ஏனெனில் வெந்தயம் உஷ்ணத்தன்மை உடையது. பெரிய அளவில் எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரை அணுகவும். இல்லையெனில், பலனுக்கு பதிலாக பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரவும். மேலும் இதுபோன்ற பதிவுகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP