கருப்பு சுண்டல் அல்லது கருப்பு கொண்டைக்கடலை இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாக கருதப்படுகிறது. இது நமது ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயனளிக்கும். கருப்பு கொண்டைக்கடலை நாம் குக்கரில் வேக வைத்து உப்பு போட்டு தாளித்து சாப்பிடுகிறோம். ஆனால் அதை தண்ணீரில் ஊறவைத்து காலையில் பச்சையாக சாப்பிடும் போது எண்ணற்ற சத்துகள் கிடைக்கின்றன. வாரத்திற்கு 3-4 முறை காலை நேரத்தில் ஊற வைத்த கொண்டைக்கடலை சாப்பிட்டு யானை பலம் பெறுங்கள்.
ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலை
கருப்பு கொண்டைக்கடலையை இரவில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பாருங்கள். 50-75 கிராம் அளவிற்கு உட்கொள்ளுங்கள். அதற்கு மேல் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. தினமும் காலை கருப்பு கொண்டைக்கடலை உட்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை வெவ்வேறு வழிகளில் பயனளிக்கும்.
ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையின் நன்மைகள்
புரதம் மற்றும் இரும்புச் சத்து
சைவ உணவு உண்பவர்கள் உடலுக்கு போதுமான புரதச்சத்து கிடைப்பதில்லை என கவலைப்படுகின்றனர். ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலை உங்களுக்கு தேவையான புரதச்சத்து கிடைப்பதை உறுதி செய்யும். நீங்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தால் உணவில் கருப்பு கொண்டைக்கடலை சேர்க்க வேண்டும். இது உடலில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்தும்
ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. செரிமான அமைப்புக்கும் உதவுகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
இதய ஆரோக்கியம்
ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையில் ஏராளமான ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் உள்ளன. இரத்தக் கட்டிகள் உருவாவதை தடுக்கும் அத்தியாவசிய தாதுக்களும் அவற்றில் உள்ளன.
எடை இழப்புக்கு உதவுகிறது
கருப்பு கொண்டைக்கடலையில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளதால் அவை நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். இதன் காரணமாக ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகள் சாப்பிடுவதை தவிர்ப்பீர்கள்.
கொலஸ்ட்ரால் அளவுகள்
கருப்பு கொண்டைக்கடலையில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து நிறைந்ததாக இருப்பதால் எடையைக் குறைக்கவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.
கூந்தலுக்கு சிறந்தது
கருப்பு கொண்டைக்கடலை உங்கள் தலைமுடி ஆரோக்கியத்திற்கு சிறந்த அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும். ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலை தொடர்ந்து உட்கொள்வது முடி நரைப்பதைத் தடுக்க உதவுகிறது.
மேலும் படிங்கவெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து குடிப்பதால் கிடைக்கும் மகத்தான நன்மைகள்
இரத்த சர்க்கரை பிரச்னைக்கு தீர்வு
கருப்பு கொண்டைக்கடலை நம் இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சுவதை கட்டுப்படுத்துகிறது. கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தையும் குறைக்கின்றன.
சருமத்தை பளபளப்பாக்கும்
ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையை உட்கொள்வது எந்தவொரு சருமப் பிரச்சினையையும் தடுக்க உதவுகிறது. இது உங்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கிறது.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation