எள்ளு விதைகள் மிக சிறியதாக இருக்கும். ஆனால் அதில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்களின் அளவு மிக பெரியது. எள்ளு மூன்று நிறங்களில் உள்ளது ஆனால் எல்லா எள்ளு விதைகளுக்கும் ஒரே அளவில் தான் ஊட்டச்சத்துக்கள் இருக்கும். எள்ளின் மொத்த சக்தியையும் பெற வேண்டும் என்றால் அதை ஒரு நாளின் முதல் உணவாக உண்ண வேண்டும். எள்ளு வைத்து செய்யும் சமையல் குறிப்புகள் சிலவற்றை இங்கு காணலாம்.
அத்திபழம், எள்ளு விதைகள் மற்றும் ஓட்ஸ்
ஓட்ஸ் என்பது பல விதமான காலை உணவுகளில் மிக சிறந்த உணவாகஇருக்கிறது. இது வயிற்றுக்கு லேசான உணவாகவும் நாவிற்கு சுவையான விருந்தாகவும் இருக்கும்.
இதுவும் உதவலாம்:சர்க்கரை நோய்க்கு சியா விதைகள் நல்லதா?
தேவையான பொருட்கள்
- ஓட்ஸ் - 1/2 கப்
- தண்ணீர் -1 கப்
- எள்ளு விதைகள் - 1 ஸ்பூன்
- அத்தி - 2 பொடியாக அரிந்த காய்ந்த அத்தி
- ஏலப்பொடி - 1 ஸ்பூன்
- தேவைக்கேற்ப உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- பிறகு அனைத்து பொருட்களையும் அதில் சேர்க்கவும்.
- 3-5 நிமிடங்கள் அடுப்பில் கொதிக்க வைத்து, பின் அடுப்பை அணைத்து விடவும்
- இதன் மேல் விருப்பமான உலர் பழங்கள் மற்றும் நட்ஸ சேர்த்து அலங்கரிக்கலாம்.
எள்ளுடன் சேர்ந்த காய்கறி ஆம்லெட்
பிரட் மற்றும் காய்கறிகள் கலந்த ஆம்லெட் செய்து சாப்பிட பிடிக்கும் என்றால் இந்த குறிப்பை செய்து பார்க்கலாம்.
தேவையானவை
- வெங்காயம் - 1/2 அரிந்தது
- குடைமிளகாய் -1/2 அரிந்தது
- தக்காளி - 1/2 அரிந்தது
- பொடியாக அரிந்த காய்கறிகள் கலவை
- முட்டைகள் - 2-3
- எள்ளு விதைகள் - 1-2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- காரம் - தேவையான அளவு
செய்முறை
- காய்கறிகளை அரிந்து தனியாக வைக்கவும்
- ஒரு பெரிய பாத்திரத்தில், முட்டையை உடைத்து அதில் உப்பு மற்றும் காரம் சேர்க்கவும்.
- இப்போது இதில் அரிந்த காய்களை சேர்த்து கலக்கவும்.
- ஒரு சூடான கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் இந்த முட்டை கலவையை ஊற்றவும்.
- இந்த முட்டை கலவை மீது எள்ளு விதைகள் தூவி, வேக விடவும்.
- நன்கு வெந்ததும் இதை டோஸ்ட் செய்த பிரட் மேல் வைத்து சாப்பிடலாம்.
சப்பாத்தியுடன் எள்ளு விதைகள்
தேவையானவை
- கோதுமை மாவு - தேவையான அளவு
- எள்ளு விதைகள் - 1 ஸ்பூன்
- உப்பு தேவைக்கு
- தண்ணீர் தேவைக்கு
- வெண்ணெய் (தேவைப்பட்டால்)
செய்முறை
- ஒரு பெரிய பாத்திரத்தில், கோதுமை மாவு, எள்ளு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
- இவற்றை பிசைந்து மென்மையான உருண்டைகளாக உருட்டி சில நிமிடங்கள் தனியாக வைக்கவும்.
- சப்பாத்தி கட்டையால் இதை தேய்க்கவும்.
- ஒரு சூடான தோசை கல்லில் தேய்த்த சப்பாத்திக்களை போட்டு கொஞ்சம் நெய் அல்லது வெண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.
- உங்கள் உணவில் எள்ளு விதைகள் சேர்க்க பல வழிகள் உள்ளன. நீங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு சாலட் செய்யும் போது, வறுத்து பொடித்த எள்ளு சேர்த்தால் கூடுதலான சுவை கிடைக்கும்
- எள்ளு விதைகள் கொண்டு சிற்றுண்டியாக எள்ளு மிட்டாய் மற்றும் எள்ளு லட்டு செய்து சாப்பிடலாம்
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation