கருத்தரிக்க முயற்சிக்கும் போது அல்லது ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும் போது உடல் எடை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பல பெண்கள் கருத்தரிக்கும் போது அதிக எடை அல்லது எடை குறைவாக இருந்தால் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். எடை குழந்தையின் ஆரோக்கியத்தை கூட பாதிக்கலாம். கர்ப்ப கால எடையை பற்றி உணவியல் நிபுணர் மனோலி மேத்தா அவர்கள் இன்ஸ்டாகிராமில் இந்த விஷயத்தில் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: PCOS பாதிப்பால் கர்ப்பம் தரிக்க முடியலையா? இந்த மூலிகை தேநீர் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்
கர்ப்ப காலத்தில் அதிக எடையின் விளைவு
அதிக எடையுடன் இருந்தால் கருத்தரிக்க முயற்சிக்கும் போது அது ஒரு சிக்கலை உருவாக்கலாம். மாதவிடாய் சுழற்சியை சீர்குலைத்து, பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) வாய்ப்புகளை அதிகரிக்கலாம், முட்டைகளின் தரத்தை பாதிக்கலாம் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும். பல சந்தர்ப்பங்களில், அதிக எடையுடன் இருப்பது ஆரம்ப மாதங்களில் கருச்சிதைவுக்கு வழிவகுக்கிறது.
கர்ப்ப காலத்தில் எடை குறைவாக இருப்பதன் விளைவு
எடை குறைவாக இருந்தால் கர்ப்பத்தை கடுமையாக பாதிக்கும். பிஎம்ஐ 18.5க்கும் குறைவாக இருந்தால் மாதவிடாய் சுழற்சியை நேரடியாகப் பாதிக்கும். மாதவிடாய் ஒழுங்கற்றதாக மாறும், இது இனப்பெருக்க அமைப்பை பாதிக்கத் தொடங்கும். எனவே எடை குறைவாக இருந்தால் மற்றும் கருத்தரிக்க திட்டமிட்டால் ஒரு மருத்துவரை அணுகி அதன்படி செயல்பட வேண்டும்.
உடற்பயிற்சி
கருத்தரிக்க திட்டமிடத் தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு உணவில் சில மாற்றங்களைச் செய்ய முயற்சிக்கவும். உணவில் ஆரோக்கியமானவற்றை தேர்ந்தெடுக்கவும். அதே சமையம் உடற்பயிற்சியும் இருக்க வேண்டும். தொடக்கத்தில் தீவிர உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். மெதுவாக உடற்பயிற்சியின் வேகத்தை கூட்டலாம். விரைவில் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் காண முடியும்
ஆரோக்கியமான எடையை பராமரித்தால் முட்டைகளின் தரத்தை மேம்படுத்தி, மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதன் மூலம் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். வாழ்க்கை முறையின் இந்த சிறிய மாற்றங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டும்?
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation