ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க இந்த சிறு தானியங்களை ட்ரை பண்ணுங்க!

உடல் எடையைக் குறைப்பதற்கு மறக்காமல் இந்த சிறு தானிய உணவுகளை ட்ரை பண்ணுங்க

weight loss   millet recipes

இன்றைய உணவு கலாச்சாரம், மாறி வரும் சமூக சூழல்கள் அனைத்தும் உடல் பருமன் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. குறிப்பாக நேரம் தவறி சாப்பிடுவது, நொறுக்குத் தீனிகள், எண்ணெய் பலகாரங்களை சாப்பிடுவதால் இளம் வயதில் இருந்தே உடல் எடை அதிகரிக்கிறது. தோற்றத்தை மட்டும் உடல் பருமன் பாதிப்பதில்லை. உடல் பருமனால் கொலஸ்டிரால் பிரச்சனை, இதய நோய் பிரச்சனை, மூச்சுத் திணறல் போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் கட்டாயம் உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோ அவற்றில் சில உங்களுக்காக..

weight gain

உடல் எடையைக்குறைக்கும் சிறு தானியங்கள்:

கம்பு, கேப்பை, தினை, சாமை, குதிரைவாலி, போன்ற பல்வேறு சிறுதானியங்களில் அதிகளவில் டயட்ரி நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேர்வதைத் தடுப்பதோடு, ஜீரண சக்தியை முறையாக நடைபெற உதவியாக உள்ளது. ஆம் சிறுதானிய உணவுகளை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது ஜீரண சக்தியை இலகுவாக்கி, நீண்ட நேரத்திற்கு பசி உணர்வை இல்லாமல் செய்கிறது.

கேழ்வரகு:

கேப்பை, ராகி, கேழ்வரகு என பல பெயர்களைக் கொண்ட இந்த சிறு தானியங்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். முன்பெல்லாம் நம்முடைய முன்னோர்களின் உணவு முறைகளில் முக்கியமானதாக இருந்தது கேழ்வரகு. இதில் உள்ள இரும்புச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருப்பதோடு உடல. எடையையும் குறைக்க உதவியாக உள்ளது.

கேழ்வரகு ரெசிபிகள்:

என்ன தான் உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருந்தாலும் காலை உணவை ஸ்கிப் செய்யக்கூடாது. இதனால் உடல் வலுயை இழக்கும். எனவே டயட்டில் சிறுதானிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். குறிப்பாக கேப்பை ரொட்டி, கேப்பை கூழ், கேப்பை தோசை என உங்களுக்கு விருப்பமான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

தினை:

சிறு தானிய உணவுகளில் தினையில் செய்யப்பட்டக்கூடிய பொங்கல், பணியாரம், போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள கால்சியம், புரதம், நார்ச்சத்துக்கள் உடல் செயல்பாடுகளை சீராக்க உதவுகிறது. தேவையில்லாத கொழுப்புகள் உடலில் சேர்வதைத் தடுக்கிறது.

குதிரை வாலி:

millet recipes ()...

வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், மெக்னீசயம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களைக்கொண்ட குதிரை வாலியை உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் தேர்வு செய்யலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நாள் முழுவதும் பசி உணர்வை ஏற்படுத்தாது. ஜீரண சக்தியையும் மேம்படுத்துகிறது. எனவே குதிரை வாலியில் பொங்கல், தயிர் சாதம் போன்ற ரெசிபிகளை செய்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க:உங்கள் குழந்தையின் கண்களில் நீர் வருகிறதா? இதுதான் காரணமாக இருக்கும்!

இதோடு மட்டுமின்றி கம்பு, சோளம், வரகு போன்ற சிறு தானிய உணவுகளையும் கட்டாயம் உணவு முறையில் சேர்த்துக் கொள்வது நல்லது.

Image source - google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP