அடிபட்டால் உடனடியாக டிடி ஊசி போடணுமா ? தவிர்த்தால் சீழ் பிடிக்குமா ?

ஒவ்வொரு முறையும் அடிபட்ட பிறகு டிடி ஊசி போடுகிறோம். இது அவசியமா ? போடவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

purpose of tetanus shot

ஒவ்வொடு முறையும் நாம் கீழே விழுந்து அடிபடும் போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகிறோம். அப்போது மருத்துவர் கடைசியாக எப்போது டிடி ஊசி போட்ட ஞாபகம் இருக்கிறதா என கேட்பார். சரியாக நினைவு இல்லை அல்லது பயங்கரமாக அடிபட்டு இருந்தால் நாமே டிடி ஊசி போடுங்கள் என கூறுகிறோம். அடிபடும் போதெல்லாம் டிடி ஊசி அல்லது செப்டிக் ஊசி போட வேண்டுமா ? டிடி ஊசி போடுவதன் நோக்கம் என்ன ? சீழ் பிடிக்காமல் இருக்க டிடி ஊசி போடப்படுகிறதா ? போன்ற காரணங்களை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒருவருக்கு அடிபட்டு காயமாகும் இடத்தில் செப்டிக் அல்லது சீழ் பிடிக்கிறது என்றால் அதற்கு காரணம் பாக்டீரியா வளர்ச்சி ஆகும். பாக்டீரியாக்கள் அடிப்பட்ட இடத்திற்குள் புகுந்து வளர்ந்து சீழ் பிடிக்கும். சீழ் பிடிக்காமல் இருப்பதற்கு டிடி போடுகிறோமா ? இல்லை. இதில் உண்மையான அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால் சீழ் பிடிக்காமல் இருக்க டிடி ஊசி உதவாது என்பது தான் உண்மை. சீழ் பிடிப்பதற்கும் டிடி ஊசி போடுவதற்கும் தொடர்பு கிடையாது.

tetanus injection

அடிபட்ட இடத்தில் சீழ் பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ? மருத்துவர்கள் அடிபட்ட இடத்தை முதலில் சுத்தம் செய்கிறார்கள். அதன் பிறகு காயம் குணமடைய ஆயின்மென்ட் போடப்படுகிறது. சில மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகிறது. காயம் குணமாகும் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை டிரெஸ்ஸிங் செய்தால் பிரச்சினை வராது.

டிடி என்றால் டெட்டனஸ் டாக்ஸாய்டு என்று அர்த்தம். உடலில் ஒரு பகுதியில் மோசமான காயம் ஏற்படும் போது மண்ணில் இருக்கும் டெட்டனஸ் பாக்டீரியா உள்ளே சென்று வளரும். அப்படி நடந்தால் இரண ஜன்னி என்றும் நோய் வரும். இதற்கு சிகிச்சையே கிடையாது. உடல் கடுமையாக பாதிக்கப்படும். அதற்காக தான் டெட்டன்ஸ் டாக்ஸாய்டு ஊசி போடப்படுகிறது. இது ஒரு உயிர்க்கொல்லி ஆகும்.

மேலும் படிங்கசர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா ? சர்க்கரை அளவு அதிகரிக்குமா ?

சில சமயங்களில் இரும்பில் அடிபட்டால் அல்லது வண்டியில் இருந்து கீழே விழுந்து கம்பி குத்தினால் டெட்டனஸ் ஊசி போட நாமே நினைக்கிறோம். ஒவ்வொரு முறையும் அடிபட்டால் டிடி போடணுமா என்றால் கிடையாது.

குழந்தைகள் பிறந்தவுடனேயே நாம் மருத்துவர் அறிவுரைப்படி தடுப்பூசி போடுகிறோம். இதில் டிடி இடம்பெறுகிறது. பத்து வயது வரை போடும் பல தடுப்பூசிகளில் கலந்து இருக்கும். பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அடிபட்டாலும் டிடி தேவையில்லை.

சின்ன காயம் இருந்து பத்து வருடத்திற்குள் டிடி ஊசி போட்டிருக்கும் பட்சத்தில் மீண்டும் டிடி ஊசி போட தேவையில்லை. மிக மோசமான காயம் என்றாலும் ஐந்து வருடத்திற்குள் டிடி போட்டு இருந்தால் மீண்டும் போட தேவையில்லை.

மருத்துவரின் அறிவுரையின்றி மீண்டும் மீண்டும் டிடி போடக்கூடாது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பு அதிமாக வேலை செய்து காய்ச்சல் வரும். மிக மோசமான காயங்கள் இருந்தாலும் வேறு மருந்துகள் இருக்கின்றன. டிடி அவசியமில்லை.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP