acne problem: முகத்தில் பருக்கள் வர இவை தான் காரணமா!!!

pimple face: உணவு தொடர்பான அலட்சியத்தால் முகப்பருக்கள் வரலாம். இதற்குக் காரணமான உணவுகள் பற்றி அறிவோம் வாருங்கள்.

acne problem big

இன்றைய காலகட்டத்தில், முகத்தை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்வது கடும் சவாலாகவே இருக்கிறது. பெண்களில் பலர் பருக்களால் பாதிக்கப்படுகின்றனர். இதைப் போக்க மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய பல பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால், பருக்கள் வருவதற்கான காரணம் தெரிந்தாலே, அதை எளிதாகப் போக்க முடியும். மேலும், பருக்கள் வருவதை தடுப்பதற்கு உணவு பழக்கவழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

பொதுவாக, முகத்தில் வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை வரப் பல காரணங்கள் உள்ளன. சருமத்திற்கு மோசமான அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்துவதாலும் இவை வரலாம். அதேபோல, அழுக்கான கைகளால் முகத்தைத் தொட்டால் கூட அது இன்னும் மோசமடையும் என்பதை மறவாதீர். இவற்றோடு, சில உணவுகளை சாப்பிடும்போதும் பருக்கள் வரலாம். அவை என்னவென்பதை இந்த சிறப்புப் பதிவு விளக்குகிறது.

கொலம்பியா பல்கலைக்கழக சரும மருத்துவ நிபுணரான டாக்டர் கிரண் MD அவர்கள், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பருக்கள் வருவதற்கான காரணத்தைப் பகிர்ந்துள்ளார்.

பருக்கள் வரக் காரணமாக உள்ள உணவுகள்

1. சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் சர்க்கரை

acne problem

கார்போஹைட்ரேட்டை அளவுக்கு அதிகமாக நீங்கள் எடுத்துக்கொள்ளும்போது பருக்கள் வருவதாக இவர் கூறுகிறார். மேலும், சர்க்கரை சேர்த்து கொள்ளும்போதும் பருக்கள் வருகிறதாம்.

2. பாலும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களும்

பருக்கள் வர இரண்டாம் நிலை காரணமாக இருப்பது பாலால் ஆன உணவுப் பொருட்கள் என்கிறார் டாக்டர் கிரண் அவர்கள். இவற்றை சேர்த்துக்கொள்வதால் முகப்பருக்கள் பிரச்சனை அதிகரிப்பதாகக் கோரும் பல ஆய்வு முடிவுகளையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

3. துரித உணவுகள் (ஃபாஸ்ட் ஃபுட்)

acne problem

இன்றைய காலகட்டத்தில் துரித உணவுகளை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இவை உடலுக்குக் கேடு விளைவிப்பவை. இவை பருக்கள் வரவும் காரணமாக இருக்கின்றன.

4. ஒமேகா

உணவுகள் கொழுப்புகளைக் கொண்டது. எந்தவொரு உணவில் அதிகம் ஒமேகா உள்ளதோ, அவை பருக்கள் வரக் காரணமாக அமைகின்றன. இதனைத் தவிர்த்து, உடலில் இன்சுலின் அதிகமாக இருந்தாலும், பருக்கள் வர வாய்ப்புள்ளது என்கிறார் டாக்டர் கிரண் அவர்கள்.

தோழிகளே, பருக்கள் வரக் காரணமாக உள்ள உணவுகள் குறித்து இப்போது பார்த்தோம். உங்களுக்குப் பருக்கள்பற்றிய வேறுசில சந்தேகங்கள் இருந்தால் அல்லது வேறு ஏதாவது தலைப்புகுறித்த கேள்விகள் இருந்தால் அதனைக் கமெண்டில் தெரியப்படுத்தவும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP