சிறுநீர் கழிக்கும் முன்பும் கழித்த பின்பும் தண்ணீர் குடிக்கும் இடைவேளை நேரம் தெரியுமா ?

சிறுநீர் கழிக்கும் முன்பும் கழித்த பின்பும் எவ்வளவு நேர இடைவெளியில் தண்ணீர் குடிக்கணும் ? சிறுநீர் கழித்தவுடன் உடனடியாக தண்ணீர் குடிக்கலாமா ? குடிக்கும் தண்ணீர் சிறுநீரை தவிர்த்து வேறு எப்படி உடலில் இருந்து வெளியேறுகிறது உள்ளிட்ட மருத்துவ தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
image

பொதுவாக ஆண்கள் தினமும் 3.5 லிட்டர் தண்ணீரும், பெண்கள் தினமும் 2.7-2.8 லிட்டர் தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. நாம் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால் சிறு சிறு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சிறுநீர் கழிக்கும் முன்பும் கழித்த பின்பும் எவ்வளவு நேர இடைவெளியில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் பலரிடத்தில் உள்ளது. சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது சிலர் தண்ணீர் குடிக்காதீர் சாப்பிடும் முன்பாக அல்லது சாப்பிட்ட பிறகு சிறிது நேர இடைவேளை விட்டு தண்ணீர் குடிக்க அறிவுறுத்துவார்கள்.

Can we drink water immediately after peeing

தண்ணீர் குடித்த பிறகு சிறுநீர் கழித்தல்

ஆராய்ச்சிகளின் படி தண்ணீர் குடித்த பிறகு சிறுநீர் கழிப்பது சரியானதாகும். எனினும் தண்ணீர் குடிக்கும் நேரத்திற்கும் சிறுநீர் கழிப்பதற்கும் நேர இடைவேளை அவசியம். உடலுக்கு நீராதாரம் தேவைப்படும் நேரத்தில் தண்ணீர் குடித்தாக வேண்டும். இதை செய்ய தவறினால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்படலாம்.

தண்ணீர் குடித்த பிறகு என்ன நடக்கும் ?

நாம் பெரும்பாலும் தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடிக்கிறோம். உடலில் நீரேற்றத்தை உறுதி செய்ய தண்ணீர் குடிக்கும் போது சில டம்ளர் தண்ணீர் குடித்த பிறகு மூளை நாம் போதுமான அளவு தண்ணீர் குடித்ததாக அறிவுறுத்தும். அருந்திய தண்ணீர் செல்களை சென்றடைய நேரம் எடுக்கும். மூளை - வாய் இடையிலான தொடர்பு நாம் தண்ணீர் அருந்தும் நேரத்தில் போதும் என்ற சமிக்கையை கொடுக்கும்.

உடலில் தண்ணீர் வழிப்பாதை

உணவுக்குழாய், வயிறு, சிறு குடல் - பெருங் குடல், இரத்தம், கல்லீரல், இதயம், இரத்தம், செல்கள், இரத்தம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சிறுநீர் பாதை. உணவுக்குழாய் வழியாக உடலுக்குள் இறங்கும் தண்ணீர் சிறுநீர் பாதை வழியாக வெளியேறும்.

சிறுநீர் வெளியேற்ற நேரம்

நாம் குடித்த தண்ணீர் வயிற்றில் உறிஞ்சப்படும் நேரத்தை பொறுத்து சிறுநீர் கழிக்க நேரிடும். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் போது உடலில் தண்ணீர் வேகமாக உறிஞ்சப்படும். தண்ணீர் குடித்த 5 நிமிடங்களில் கூட தண்ணீர் உறிஞ்சப்பட வாய்ப்பு உண்டு. ஒரு வேளை தண்ணீர் குடிக்கும் முன்பாக அதிகளவு சாப்பிட்டு இருந்தால் அல்லது வயிறு முழுமையாக இருந்தால் தண்ணீர் உறிஞ்சப்படும் நேரம் தாமதமாகும். சில மணி நேரம் கூட எடுக்கலாம்.

சராசரியாக ஒரு நபரால் 1 லிட்டர் திரவத்தை செரிமானப் அமைப்பில் முறைப்படுத்த முடியும். இதில் 20 விழுக்காடு நீர் மட்டுமே சிறுநீர்ப்பை வழியாக வெளியேறும். இதற்கிடையே தண்ணீர் தேவையான உறுப்புகளால் உறிஞ்சப்படும், உடல் வெப்பத்தை பாதுகாக்கும், நச்சுகளையும் கழிவுகளையும் வெளியேற்ற உதவும். தண்ணீர் குடித்த பிறகு எவ்வளவு நேர இடைவேளையில் சிறுநீர் கழிக்கலாம் என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். இது பல்வேறு காரணங்களை பொறுத்தது. சிலருக்கு 2 கப் சிறுநீர் வர 9 முதல் 10 மணி நேரம் எடுக்கலாம். உடலை நீரேற்றமாக வைத்து சிறுநீர்ப்பை முழுமையாக இருந்தால் தண்ணீர் குடித்த 10-15 நிமிடங்களில் சிறுநீர் வரும். உடலில் நீரேற்றம் இன்றி சிறுநீர்ப்பை காலியாக இருந்தால் சிறுநீர் வெளியேற 9 மணி நேரம் எடுக்கலாம். மலத்தின் வழியாக 75 விழுக்காடு தண்ணீரும், வியர்வை வழியாக 500 முதல் 700 மில்லி லிட்டர் தண்ணீர் உடலில் இருந்து வெளியேறும்.

மேலும் படிங்ககுடலை கடுமையாக பாதிக்க கூடிய உணவுகள்; சாப்பிட்டு அவஸ்தை படாதீங்க

சிறுநீர் கழித்தவுடன் தண்ணீர் குடிக்கலாமா ?

சிறுநீர் கழித்தவுடன் உடனடியாக தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு சரியானதல்ல. சிறுநீர் கழிக்க செல்லும் அரை மணி நேரத்திற்கு முன்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர் கழித்தவுடன் உடனடியாக தண்ணீர் குடிப்பது சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை கொடுக்கும். சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்படுவீர். அதே போல சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது செரிமானத்தில் தடையை உண்டாக்கும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP