Urine infection symptoms: ஜாக்கிரதை பெண்களே.. இதெல்லாம் சிறுநீர்ப்பாதை தொற்றின் அறிகுறிகளாம்!

நாள் முழுவதும் அதிகளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும் சிறுநீர்ப் பாதை தொற்று பெண்களை அதிகளவில் தாக்கக்கூடும்.

uti for women treatment

ஒவ்வொரு பெண்களும் தங்களது வாழ்நாளில் ஒருமுறையேனும் சிறுநீர்ப் பாதை தொற்று பாதிப்பை சந்திருப்பார்கள். அந்தளவிற்குப் பெண்களை மிகவும் பாதிக்கக்கூடிய பாக்டீரியா தொற்றுகளில் ஒன்று தான் யூரினரி டிராக் இன்பெக்சன் (UTI) எனப்படும் சிறுநீரகப் பாதை தொற்று. பெண்களுக்கு சிறுநீர் போகும் வழியும், மலக்கழிவு வெளியேறும் இடமும் அருகருகே இருப்பதால் தான்,ஆண்களை விட பெண்களுக்கு இந்த தொற்று அதிகளவில் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வேறு என்னெ்ன பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பது குறித்தும் இங்கே அறிந்துக் கொள்வோம்.

Urinary infection

UTI பாதிப்பிற்கானக் காணங்கள்?

  • பொது கழிப்பிடங்களுக்குச் சென்று வந்தாலே பெண்கள் ஒரு வார காலத்திற்கு தொற்றின் பாதிப்பைச் சந்திப்பார்கள். சிறுநீர்ப்பாதை வழியாக பாக்டீரியா தொற்றுகள் வேகமாக பரவுவதால் அந்தரங்கப் பாகத்தில் எரிச்சல் ஏற்படும்.
  • ஒரே இடத்தில் அமர்ந்து மணிக்கணக்காக வேலை செய்வதும், நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பதும் யுடிஐ பாதிப்பைப் பெண்களுக்கு ஏற்படுத்தும்.
  • மாதவிடாய் காலத்தில் பெண்கள் நாப்கின்களை அதிக நேரம் பயன்படுத்தினாலும் தொற்று ஏற்படக்கூடும்.
  • சிறுநீர் கழித்தப் பிறகு, அந்தரங்கப் பகுதிகளை முறையாக சுத்தம் செய்யாமல் இருப்பது சிறுநீர்ப்பாதை தொற்றுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது.
  • உடலுறவிக்குப் பின்னர் அந்தரங்கப் பகுதிகளை முறையாக சுத்தம் செய்யாமல் இருப்பதும் யுடிஐ பாதிப்பிற்கு முக்கியக் காரணம்.
  • நாள் முழுவதும் அதிகளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும் சிறுநீர்ப் பாதை தொற்று பெண்களை அதிகளவில் தாக்கக்கூடும்.
  • பெண்களுக்கு அதிகளவு வெள்ளைப் படுவதாலும் சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்படுகிறது.

சிறுநீர்ப் பாதைத் தொற்றுக்கான அறிகுறிகள்:

  • பெண்களுக்கு சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படுவதற்கு இதுப்போன்ற காரணங்கள் கூறப்பட்டாலும், சில அறிகுறிகளும் ஏற்படும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
  • சிறுநீர் கழிக்கும் போது அந்தரங்க உறுப்பில் எரிச்சல் ஏற்படுதல்.
  • தொடைப்பகுதி வறண்டு தோல் உரிதல்
  • சிறுநீரின் நிறத்தில் மாற்றம் மற்றும் மலம் கழிக்கும் போது வலி.
  • சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வயிற்று வலி ஏற்படுதல்
  • கடுமையான முதுகு வலி மற்றும் உடல் சோர்வு போன்றவை ஏற்படும்.
  • பெண்களுக்கு சில நேரங்களில் தலைச்சுற்றல், குளிர்காய்ச்சல், தொடை வறண்டு இருப்பதால் நடப்பதற்குக்கூட சிரமம் ஏற்படும்.

எப்படி சரி செய்வது?

  • பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர்ப்பாதை தொற்று என்பது பாக்டீரியாக்களால் ஏற்படக்கூடியது என்பதால் அச்சப்படத்தேவையில்ரலை. ஆனாலும் மருத்துவர்களிடம் முறையான சிகிச்சை மேற்கொள்வது நல்லது. மருத்துவர்களின் அறிவுரைகளின் படி தொடர்ச்சியாக ஒரு வார காலத்திற்கு ஆன்டிபயாடிக் மாத்திரைகளை நீங்கள் உட்கொள்ளலாம்.
UTI advice to doctor
  • உங்களுக்கு மாத்திரைகள் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் ஏற்படும் என்ற பயம் இருந்தால் வீட்டிலேயே சில வைத்தியங்களை நீங்கள் மேற்கொள்ளலாம்.
  • உங்களுக்கு சூடு தாங்கும் அளவிற்கு தண்ணீரை வைத்துக்கொள்ளவும். அதனுடன் வேப்பிலை, மஞ்சள், உப்பு சேர்த்து சிறுநீர்ப் பாதையை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இவை மூன்றிற்கும் பாக்டீரியா அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளதால் இந்த பாதிப்பை சரிசெய்யும்.
  • சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்றை சரிசெய்ய வேண்டும் என்றால், நீங்கள் தேங்காய் எண்ணெய்யை பாதிக்கப்பட்ட இடத்தில் அப்ளை செய்யவும். இது ஓரளவிற்கு எரிச்சலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.

இதுப்போன்ற முறைகளை நீங்கள் பின்பற்றினாலும் ஒரு வார காலத்திற்கு மேல் சிறுநீர்ப்பாதை தொற்று பாதிப்பு இருந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP