herzindagi
oily fish card image ()

Oily Fish Benefits: இதய நோய் வராமல் தடுப்பது முதல் எண்ணற்ற சத்துக்களை கொண்ட எண்ணெய் மீன்கள்

எண்ணெய் சார்ந்த மீன்களில் தோல், முடி, இதயம் மற்றும் மூளைக்கு மிகவும் நன்மை பயக்கும். அவற்றில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை பார்க்கலாம் 
Editorial
Updated:- 2024-05-13, 19:57 IST

அசைவ உணவை ஆரோக்கியத்தின் பார்வையில் பார்த்தால் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. உதாரணமாக மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நல்ல அளவில் காணப்படுகின்றன. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களுடன், எண்ணற்ற பல ஊட்டச்சத்துக்கள் மீன்களில் காணப்படுகின்றன. இதைப்பற்றி போதிய தகவல் இல்லாததால் மக்கள் மீன்களை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை. 

நொய்டா மருத்துவர் டாக்டர் வி.கே. சிங் கூறிய தகவல்களை பார்க்கலாம். சால்மன், திருக்கை, மத்தி, வெங்கணை, ஈல் மற்றும் கிப்பர் போன்ற சில வகையான மீன்கள் எண்ணெய் மீன் என்று அழைக்கப்படுகின்றன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இரும்புச்சத்து, அயோடின் மற்றும் வைட்டமின் ஈ, ஏ மற்றும் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் எண்ணெய் மீன்களில் ஏராளமாக உள்ளன. அத்தகைய சூழ்நிலையில் எண்ணெய் மீன் நுகர்வு முடி, இதயம் மற்றும் மூளைக்கு மிகவும் நன்மை பயக்கும். அவற்றை உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

மேலும் படிக்க: இந்த அறிகுறிகள் பெண்களுக்கு இருந்தால் கண்டிப்பான கால்சியம் குறைபாடாக இருக்கும்

இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்

oily fish heart inside

எண்ணெய் நிறைந்த மீன்களை உட்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு குறிப்பாக பயனுள்ளதாக கருதப்படுகிறது. எண்ணெய் மீன்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதயத் துடிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. மாரடைப்பு அபாயத்தை குறைக்க இந்த வகை மீன்கள் உதவியாக இருக்கிறது. எனவே இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணெய் மீன்களை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்

எண்ணெய் நிறைந்த மீன்களை உட்கொள்வது கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எண்ணெய் மீனில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவியாக இருக்கும். இதனால் கண்பார்வை அதிகரிக்கிறது.

மன பிரச்சனைகளில் இருந்து விடுதலை

எண்ணெய் மீனை உட்கொள்வது மன ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இது மூளையின் செயல்பாட்டில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இதனால் நினைவாற்றல் மற்றும் செறிவு அதிகரிக்கும். டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற மூளை பிரச்சனைகளில் இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

மூட்டுவலி பிரச்சனையில் நிவாரணம்

leg pain inside

எண்ணெய் மீன்களில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் கீல்வாதம் பிரச்சனையில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள் தங்கள் அன்றாட உணவில் எண்ணெய் மீனை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது மூட்டு வலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும்

எண்ணெய் மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் நுகர்வு பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை சுமார் 55% குறைக்கிறது என்று மருத்துவத் துறையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி காட்டுகிறது. இதனுடன் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்க உதவுவதாகக் கருதப்படுகிறது.

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது

மேலும் படிக்க: இதய நோய் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை பல ஆரோக்கிய பலன்களை தரும் பூண்டு தோல்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது வீக்கம் மற்றும் பருக்கள் பிரச்சனையை குறைப்பதன் மூலம் சருமத்தை பராமரிக்க உதவுகிறது. சருமத்தின் முதுமையைத் தடுக்கும் ஆற்றல் எண்ணெய் மீன்களுக்கு உண்டு. அதேபோல் சருமத்திற்கு உள்ளிருந்து நீரேற்றத்தை வழங்குகிறது. இதன் காரணமாக தோல் நீண்ட காலத்திற்கு இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com