பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்று தாய்மார்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஸ்மோக் பிக்ஸட் சாப்பிட்ட சிறுவன் வயிற்றை பிடித்தபடி அம்மா அம்மா என கத்தி சிறிது நேரத்தில் மயக்கமடைவது போன்ற காட்சி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுவன் உயிரிழக்கவில்லை என்பது முக்கிய தகவல்.
இது போன்று விற்கும் #SmokeBiscuit என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.. குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள்.. அதில் ஊற்றப்படுவது #LiquidNitrogen.. ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து.. தமிழக அரச இதற்கு தடை விதிக்க வேண்டும் @CMOTamilnadupic.twitter.com/Nel8I57h5A
— Mohan G Kshatriyan (@mohandreamer) April 21, 2024
ஸ்மோக் பிக்ஸட் ஆபத்தா ?
பிக்ஸட்டை வாயில் போட்டால் ஸ்மோக் வருவதற்கு நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. இந்த திரவ நைட்ரஜன் ஒரு நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற வாயு ஆகும். இதன் வெப்ப நிலை − 196°C என கூறப்படுகிறது. திரவ நைட்ரஜன் எந்த பொருளையும் உடனடியாக உறைய வைக்கும் திறன் கொண்டது. இதை பெரும்பாலும் தொழில் நிறுவனங்கள், மருத்துவ ஆய்வகங்களில் பயன்படுத்துவார்கள். பல நாடுகளில் இந்த திரவ நைட்ரஜனை பயன்படுத்தி பிஸ்கட், ஐஸ் கிரீம் ஸ்மோக் செய்வதற்கு மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை நேரடியாக உணவு பொருள் மீது பயன்படுத்தி சிறிது நேரம் கழித்து உட்கொள்ள முயற்சித்தால் கடினமாக இருக்கும். அந்த உணவை உடைத்து சாப்பிட நேரிடும்.
திரவ நைட்ரஜனை உண்ணும் பொருள் மீது பயன்படுத்தி அதை உட்கொண்ட பிறகு உடல் உறுப்புகள் கடுமையான குளிரை (− 196°C) எதிர்கொள்ளும் நிலைமை உண்டாகும். மூச்சு குழாய், நுரையீரலில் பாதிப்படையும். இறுதியாக மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் ஏற்படும். மோகன் ஜி பதிவிட்ட வீடியோவுக்கு பலருக்கும் விளக்கம் கொடுத்திருந்தனர். இது உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை எனவும் திரவ நைட்ரஜனால் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் பதிவிட்டு இருந்தனர்.
ஆனால் டெல்லி அருகே உள்ள குருகிராமில் சில வருடங்களுக்கு முன்பு காக்டெய்ல் திரவ நைட்ரஜன் குடித்த ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மருத்துவர்கள் அந்த நபரின் வயிற்றை பாதி அகற்றிய பிறகே காப்பாற்ற முடிந்தது.
இந்த விஷயத்தில் தமிழக அரசு உண்மைத்தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வரை குழந்தைகள் ஆசைப்படுவதற்காக 30 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த ஸ்மோக் பிஸ்கட்டை வாங்கி கொடுப்பதை தவிர்க்கவும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation