உங்களுக்கு தெரியுமா? வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட்டு வர, தீராத நோய்கள் பல தீரும்!!!

நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து படித்தறிவோம் வாருங்கள்.

gooseberry sol big

அழகு மற்றும் ஆரோக்கியம் குறித்த பல வித பிரச்சனைகளுக்கும் நெல்லிக்காய் அற்புதமான மருந்தாக உள்ளது.

நெல்லிக்காய் பலவித ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதனில் வைட்டமின் - C அதிக அளவில் உள்ளது. ஆரஞ்சு பழங்களை விட, எட்டு மடங்கு வைட்டமின் - C அதிகமுள்ளது. இலவங்கப்பட்டை தூளை விட இரண்டு மடங்கு ஆக்சிஜனேற்ற பண்பு அதிகம் கொண்டது. அதனால் தான் நெல்லிக்காயினை அற்புதமான மருந்து என்று நாம் அழைக்கிறோம்.

இதனை பரவலாக பல வியாதிகளுக்கும் மருந்தாக பயன்படுத்துகிறோம். நெல்லிக்காயை வழக்கமாக சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆயுர்வேதத்தின்படி, சருமத்தை பளபளவென வைத்துக்கொள்ள நெல்லிக்காய் உதவுகிறது. மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தவும், கண் பார்வை மேம்படவும் நெல்லிக்காய் பயன்படுகிறது.

நெல்லிக்காய் செரிமான மேம்பாட்டுக்கும், அசிடிட்டி பிரச்சனைக்கும் உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதால், சர்க்கரை வியாதிக்கும் நன்மருந்தாக உள்ளது. மேலும் வயதான தோற்றத்துடன் தெரிவதை தடுக்கவும், முடி நரைத்து போகாமல் பார்த்துக்கொள்ளவும் நெல்லிக்காய் உதவுகிறது.

நெல்லிக்காயினை பல வழிகளில் நம்மால் பயன்படுத்த முடியும். இதனை பச்சையாகவோ, ஜூஸாகவோ, சட்னியாகவோ, மிட்டாய் ஆகவோ நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். எப்படி எடுத்துக்கொண்டாலும், இதன் பலன்கள் மாறுவதில்லை. இன்று நாம் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து தான் பார்க்கவிருக்கிறோம். இதனை ஊட்டச்சத்து நிபுணர் மேகா முகிஜா அவர்கள் பகிர்ந்துக்கொண்டுள்ளார். இவர் 2016 ஆண்டு முதல் ஊட்டச்சத்து நிபுணராகவும், தலைமை உணவியல் நிபுணராகவும், ஹெல்த் மனியா நிறுவனத்தின் நிறுவனராகவும் இருந்து வருகிறார்.

எதிர்ப்பு சக்தியை அளிக்கும் நெல்லிக்காய்

gooseberry sol

பண்டைய காலம் முதலே எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் சாப்பிட்டு வரப்பட்டது. இதனை கொண்டு சட்னி, ஊறுகாய் போன்றவை செய்து பெண்கள் சாப்பிட்டனர். நெல்லிக்காயில் வைட்டமின் - C சிறந்த அளவில் உள்ளது.

வைட்டமின் - C, ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது. ஆய்வின்படி தெரியவருவது என்னவென்றால், நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வர, ஜலதோஷ பிரச்சனை நீங்கும் என்கிறது. இதனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்பு மற்றும் துவர்ப்பு பண்பு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

முடிக்கும், சருமத்துக்கும் சிறந்தது நெல்லிக்காய்

gooseberry sol

நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, முடி உதிர்தல் குறையும், முடி வளர்ச்சிக்கு உதவும். நெல்லிக்காயில் உள்ள தனித்துவமிக்க பண்பு முடி நரைத்து போவதை தடுக்கும். நெல்லிக்காய் முடி உதிர்வதையும் தடுக்கும். முடியின் வேர்க்கால்களை தூண்டுவதன் மூலமாக முடி வளர்ச்சியும் இதனால் அதிகரிக்கும்.

ஆம், கருவேப்பிலை போலவே முடியின் வளர்ச்சிக்கு நெல்லிக்காயும் உதவுகிறது. இதனில் தேவையான கொழுப்பு அமிலம் உள்ளது. இது முடியின் வேர்க்கால்களில் ஊடுருவி முடி நரைத்து போவதை தடுக்கிறது. மேலும் பொடுகு தொல்லையையும் குறைக்கிறது. முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது.

இந்த சிட்ரஸ் பழத்தில் இரும்புச்சத்தும், கரோட்டினும் அதிகமுள்ளது. இதனால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். நெல்லிக்காய் இயற்கை கண்டிஷனராக செயல்பட்டு, மிருதுவான, பொலிவான முடியை நீங்கள் பெற உதவுகிறது.

நெல்லிக்காய் வயதான தோற்றத்தை தடுக்க உதவுவதாகும். இதனில் உள்ள வைட்டமின் - C மற்றும் ஆக்சிஜனேற்ற பண்பு சருமத்தில் ஏற்படும் வரிகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கிறது. நெல்லிக்காய் சாறுடன், தேனை கலந்து தினமும் காலை சாப்பிட்டு வர, ஆரோக்கியமான பளபளக்கும் சருமத்தை உங்களால் பெற முடியும்.

மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி பிரச்சனைக்கு உதவும் நெல்லிக்காய்

வெறும் வயிற்றில் நெல்லிக்காயினை சாப்பிட்டு வர மலச்சிக்கலும், அசிடிட்டியும் குறையும். இது அல்சர் போன்ற பிரச்சனைக்கும் நல்லது. இது உங்களுடைய ஒட்டுமொத்த செரிமான மண்டலத்தையும் சீராக இயங்க வைக்கும்.

நெல்லிக்காயில் செரிமான மண்டலத்துக்கு ஆதரவளிக்கும் பண்புள்ளது. இதனில் உள்ள நார்ச்சத்து, குடல் அசைவுகளை ஒழுங்குப்படுத்த உதவுகிறது. கூடுதலாக, நெல்லிக்காய் இரைப்பை மற்றும் செரிமான மண்டல சுரப்பிக்கும் உதவுகிறது. இதனை உண்பதால், நாம் சாப்பிடும் உணவு செரிமானமடைகிறது. மேலும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் இது உதவுகிறது.

மூட்டு அழற்சியை தடுக்கும் நெல்லிக்காய்

gooseberry sol

நெல்லிக்காயில் ப்ரோ அபோப்டோசிஸ் எனப்படும் பண்புள்ளது. இது கட்டி அல்லது வைரஸ் செல்கள் போன்றவற்றை நீக்க உதவுகிறது. இந்த பண்பினால் மூட்டு அழற்சி போன்றவை தடுக்கப்படுகிறது. மேலும் இது எலும்புகளை வலுவாக்கவும் உதவுகிறது.

இதனை தவிர மூட்டு வீக்கம், மூட்டு வலி, வலியுடன் கூடிய வாய்ப்புண் போன்ற பொதுவான பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது. நெல்லிக்காயில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்பு, அனைத்து விதமான வலிகளையும் போக்க பயன்படுகிறது.

கண்களில் சர்க்கரை வியாதி வருவதை குறைக்கும் நெல்லிக்காய்

gooseberry sol

சர்க்கரை வியாதிக்காக ஆயுர்வேதத்தில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நெல்லிக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லிக்காயில் பீட்டா குளுக்கோளின் உள்ளது. இது AKR1B1 எனப்படும் சர்க்கரை வியாதியினால் கண் பார்வை குறைபாடு ஏற்படுவதற்கு பொறுப்பேற்கும் என்சைம்களை குறைக்க உதவுகிறது.

நீங்கள் அனைத்து விதமான பயன்களையும் அடைய வேண்டுமெனில், நெல்லிக்காயை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வெகுநாட்களாக இருந்தால், மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP