Protein Rich Foods : சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்ற சிறந்த புரதம் நிறைந்த உணவுகள்

புரதம் ஆரோக்கியமான உணவின் முக்கிய பகுதியாகும். சைவ உணவு உண்பவர்களுக்கு புரதச்சத்து கிடைக்க உதவும் சிறந்த உணவுகளை பற்றி இங்கு காணலாம்...

protein rich foods for veg

புரதச்சத்து நிறைந்த உணவுகள் என்று நாம் எப்போதும் கூறுவது மீன், கோழி மற்றும் இறைச்சி ஆகியவற்றை தான். ஆனால் இதெல்லாம் வெறும் கட்டுக்கதைகள். இரண்டாவதாக சைவ உணவாளர்களுக்கு புரதச்சத்தின் ஆதாரம் என கூறப்படுவது பால், சீஸ், தயிர் மற்றும் பல்வேறு பொருட்கள், ஆனாலும் இவை மட்டும் புரதம் நிறைந்த உணவு வகைகள் அல்ல.

சைவ உணவாளர்கள் தாங்கள் உண்ண வேண்டிய புரதத்தை பற்றி கவலை பட தேவை இல்லை. அவர்கள் உடலுக்கு தேவையான புரதம் கிடைக்க மேலும் பல்வேறு வழிகள் இருக்கின்றன. இங்கு புரதச்சத்து கிடைக்கும் பல்வேறு ஆதார பொருட்களை பார்க்கலாம்.

டோஃபூ

high protein foods for vegetarians

இது சோயா பீன்ஸினால் தயாரிக்கப்படுவது. சைவ உணவாளர்களுக்கு புரதம் கிடைக்க இது ஒரு சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. ஆர்கானிக் முறையில் கிடைக்கும் டோஃபூவை பயன்படுத்தலாம். நம் உடலுக்கு போதுமான புரதச்சத்து கிடைக்கும். இதில் புரதச்சத்து இருப்பதை தாண்டி, டோஃபூ என்பது இறைச்சி சாப்பிட விரும்பாதவர்களுக்கு, இறைச்சி வகைகளுக்கு பதில் சரியான மாற்றாகும்.

இதுவும் உதவலாம் :எலும்பு ஆரோக்கியத்திற்கும் கால்சியம் சத்திற்கும் உதவும் சிறந்த உணவுகள்

பீன்ஸ்

பீன்ஸ் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியது. இது உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது மற்றும் குடல் ஆரோக்யத்தை மேம்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு கப் பீன்ஸ் என்பது உங்களுக்கு 6-8 கிராம் நார்ச்சத்து கிடைக்க வழி செய்கிறது. இதனால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வுடன் இருக்கும்.

ஆனால் முக்கியமாக, பீன்ஸ் தாவர வகையை சேர்ந்தது மற்றும் புரதச்சத்தின் சிறந்த ஆதாரம் கொண்டது.

பருப்பு வகைகள்

எந்த வகையான பருப்பாக இருந்தாலும், பச்சை, சிவப்பு, பிரவுன், கருப்பு என்று எந்த நிற பருப்பாக இருந்தாலும், அவை அனைத்துமே புரதச்சத்து நிறைந்தது. ஒரு அரை கப் வேக வைத்த பருப்பு உங்களுக்கு 12 கிராம் புரதச்சத்தை தருகிறது.

புரதச்சத்து பருப்பில் அதிகம் இருக்கிறது என்பதை தாண்டி, இது இரைப்பையை ஆரோக்யமாக வைத்து கொள்கிறது.

இதில் உள்ள நார்ச்சத்தானது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வளர்த்து விடுகிறது. இருதய வியாதிகள், ரத்த சர்க்கரை நோய், புற்று நோய் மற்றும் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கிறது.

மேலும் பருப்புகளில் இரும்பு சத்து, மாங்கனீஸ் மற்றும் ஃபோலே ட்நிறைந்து இருக்கிறது. நம் உடல் நலத்தை காக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் இதில் அதிகம் உள்ளது. ஒட்டுமொத்தத்தில், சைவ உணவாளர்களுக்கு பருப்பு என்பது புரதச்சத்தை மட்டும் தருவது அல்ல, உடல் ஆரோக்கியத்தையும் தருவதாகும்.

protein diet for veg

பச்சை பட்டாணி

பச்சை பட்டாணி புரதச்சத்துக்கு மிக சிறந்த ஆதாரப் பொருள். ஒரு கப் வேக வைத்த பட்டாணியில் 9 கிராம் புரதம் நிறைந்து காணப்படுகிறது. உண்மையில் இது பாலை விட அதிக புரதம் நிறைந்தது. மேலும் இதில் வைட்டமின்கள், தாதுக்கள், இரும்பு சத்து, ஜிங்க், செம்பு, வைட்டமின் C மற்றும் பல்வேறு முக்கிய பொருட்கள் பச்சை பட்டாணியில் இருக்கிறது.

இதுவும் உதவலாம் :உடல் எடையை குறைக்க பச்சைப் பயிரை எவ்வாறு பயன்படுத்துவது?

நட்ஸ்

புரதச்சத்து அதிகம் நிறைந்த பொருள் நட்ஸ் ஆகும். நீங்கள் இதை ஓட்ஸ் அல்லது வேறு சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இது உங்களுக்கு பல்வேறு நன்மைகள் செய்யும். நீங்கள் சாப்பிடும் கொட்டை வகையை பொறுத்து, ஒரு கிண்ணம் கொட்டை சாப்பிடுவது 5-7 கிராம் புரதச்சத்து கிடைக்கும். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நட்ஸ்களை பச்சையாக சாப்பிடுவது நல்லது. இதை வறுத்து சாப்பிடுவதால் சத்துக்கள் குறைந்து விடும்

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP