இந்த 6 இலைகளை மென்று வருவதால் நோய்கள் எல்லாம் பறந்து ஓடுமா!!!

மூலிகை இலைகளை கொண்டு நோய்களை விரட்டுவது எப்படி என்பதை இந்த பதிவில் படித்தறிந்து பயன் பெறலாம்.

chew leaves big

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் பல இலைகள் எண்ணற்ற பலன்களை கொண்டுள்ளன. இவற்றை நாம் உணவுமுறையில் சேர்த்துக்கொள்ளலாம். இது குறித்து படித்தறிந்து பயன் பெறலாம் வாருங்கள்.

நாம் நம்முடைய தினசரி வாழ்வில், பல காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிட்டு வருகிறோம். இவை இயற்கையாகவே நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கும் பொக்கிஷங்கள் எனலாம். ஆனால், இவற்றுக்கு காரணமான தாவர இலைகள் குறித்து யோசித்து பார்த்ததுண்டா? பலரும் இவை வீணாய் போகும் ஒன்று என கருதி காயவிடுகின்றனர். ஆனால், இந்த இலைகளில் வைட்டமின்கள், தாதுக்கள், கால்சியம், புரதச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, போலிக் அமிலம், ஆக்சிஜனேற்ற பண்பு என பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவற்றை சாப்பிடுவதால் இதயத்துக்கு நன்மை அளிக்கிறது, இரத்த சர்க்கரை கட்டுப்படும், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இப்படி எண்ணற்ற நன்மைகள் உண்டாகும்.

நீங்களும் இந்த இலைகளை பயனற்றது என நினைத்து வந்திருக்கலாம். ஆனால், இன்றைய பதிவு இந்த இலைகளினால் கிடைக்கும் பல பலன்கள் குறித்து விவாதிக்க உள்ளது. இவை உங்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

புதினா இலை

chew leaves

புதினா இலைகள் உங்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று. இது உங்களின் வயிற்றை குளுமையாக வைத்துக்கொள்ள உதவும். இது செரிமான கோளாறுகளை சரிசெய்யும். இது வாய் துர்நாற்றத்தை போக்கவும் உதவும். இதனில் ஆக்சிஜனேற்ற பண்பும், பைட்டோ ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இதனில் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தாதுக்களும், வைட்டமின்களான C, D, E மற்றும் A போன்றவையும் உள்ளது. இதனால் உங்களின் உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே, இதனை உங்கள் உணவுமுறையில் சேர்த்துக்கொண்டு வரலாம்.

வெந்தய இலை

வெந்தய இலைகளில் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் வைட்டமின் C, வைட்டமின் A மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற பல ஆக்சிஜனேற்ற பண்பும் உள்ளது. இது உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. இந்த இலைகளில் கிளைசெமிக் குறியீடு குறைவாகவே உள்ளது. இதனால் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் இது உதவுகிறது. இதனில் கால்சியம் நிறைந்திருப்பதால், எலும்பு மெலிந்து போகாமலும் பார்த்துக்கொள்கிறது.

துளசி இலை

chew leaves

மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றது துளசி இலைகள். இந்த இலைகளை மென்று வர, உடல் எதிர்ப்பு சக்தியில் நேர்மறையான விளைவை உண்டாக்கும். மேலும் இது இதய ஆரோக்கியத்துக்கும் நல்லது. அது மட்டுமல்லாமல், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. துளசி இலைகளை மென்று வரலாம் அல்லது துளசி டீ போட்டு குடிக்கலாம். இதனால் சளி மற்றும் தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

கருவேப்பிலை இலை

chew leaves

கருவேப்பிலையை பல விதமான உணவில் நாம் பயன்படுத்துவோம். இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் வயிற்று பிரச்சனைகளான வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது வயிறு வெந்து போகுதல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. இதனில் உள்ள வைட்டமின் A கண் பார்வைக்கு நல்லது. இதனை நீங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம் அல்லது 4 முதல் 5 கருவேப்பிலை இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம்.

கொத்தமல்லி இலை

இதனை இந்திய உணவில் மேலே தூவுவதற்கு நாம் பயன்படுத்துவோம். இதனை தவிர்த்து, கொத்தமல்லி இலை கொண்டு சட்னியும் செய்வோம். இது உங்களுடைய இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. தொற்றுக்கு எதிராக போராடவும் இது உதவும். மேலும் இது இதயம், மூளை, சருமம் மற்றும் செரிமான மண்டலம் மேம்படவும் உதவி செய்கிறது.

தண்ணீர்விட்டான் இலை

chew leaves

இதனில் அஸ்பார்டிக் அமிலம் உள்ளது. இதனால் நம் உடலில் உள்ள அளவுக்கு அதிகமான அம்மோனியா நடுநிலைப்படுத்தப்படுகிறது. இது உடல் பலவீனத்தை போக்கவும் உதவுகிறது. கூடுதலாக, இதனில் வைட்டமின் C மற்றும் E, போலேட் போன்ற ஊட்டச்சத்து அதிகம் உள்ளது.

கவனிக்கவும்: ஒவ்வொரு பெண்ணின் உடலும் மாறுபட்டவை. எந்தவொரு இலையையும் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் முன்பு, உணவு ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை பெறுவது நல்லது. அதே போல அவர் பரிந்துரைத்த அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: freepik, shutterstock

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP