Ayurveda Rules for Toilet in Tamil: உடலுக்கு நல்லது இந்தியன் டாய்லட்டா? வெஸ்டர்ன் டாய்லட்டா? ஆயுர்வேதம் சொல்லும் விதிமுறைகள்!

 ஆயூர்வேத கூற்றின்படி கூறப்படும் கழிப்பிடம் பயன்படுத்தும் விதிமுறைகள் பற்றி இங்கு பார்ப்போம்.

toilet rules tips

காலையில் எழுந்ததும் முதலில் அனைவரும் செய்யும் வேலை, காலை கடனை முடிப்பது. பல் துலக்குவது, மலம் கழிப்பது, குளிப்பது அனைத்தும் இந்த பட்டியலில் சேரும். இதை தவறாமல் செய்தால் உடலை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்து கொள்ளலாம். சமீபகாலமாக இந்தியாவில் பலரும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. மலச்சிக்கல் ஏற்பட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கழிப்பிடம், உணவு முறை என பல காரணங்களை குறிப்பிடலாம்.

அந்த வகையில் ஆயூர்வேத முறையில் கழிப்பிடத்திற்கு சில பொதுவான விதிமுறைகள் சொல்லப்படுகின்றன. இவற்றை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம் மற்றும் உடலுக்கும் நல்லது எனவும் கூறப்படுகிறது. எனவே, ஆயூர்வேத கூற்றின்படி கூறப்படும் கழிப்பிடம் விதிமுறைகள் பற்றி இங்கு விரிவாக பார்ப்போம். ஆயுர்வேத மருத்துவர் ரேகா ராதாமோனி இதுக் குறித்த சில சிறப்பு தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

கழிப்பிடம் செல்வதற்கான சரியான நேரம்

காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன், முதலில் கழிப்பறைக்குச் சென்ற விட்டுவந்த பின்பு தான் காபி அல்லது டீ குடிக்க வேண்டும் என்பது ஏறக்குறைய எல்லோருக்கும் தெரியும். கழிப்பறைக்கு செல்ல சரியான நேரம் சூரிய உதயத்திற்கு முன் இருக்க வேண்டும்.இப்படி செய்வது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும். மேலும் மலம் கழிப்பது தொடர்பான பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்:பெண்கள் கட்டாயம் எடுக்க வேண்டிய இரத்த பரிசோதனைகள்

toilet papper

இந்தியன் டாய்லட் அல்லது வெஸ்டர்ன் டாய்லட்

இன்றைய காலகட்டத்தில், கிட்டத்தட்ட அனைவரும் பாத்ரூமில் வெஸ்டர்ன் டாய்லெட்டை வைக்க விரும்புகின்றனர். ஆனால் டாக்டர் ரேகா ராதாமோனியின் கூற்றுப்படி இந்தியன் டாய்லட் எனச் சொல்லப்படும் இந்திய கழிப்பறையே உடலுக்கு சிறந்தது. இந்திய கழிவறையைப் பயன்படுத்துவது வயிறு மற்றும் கால் பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது.

டாய்லட் பேப்பரை பயன்படுத்துவது

இப்போதெல்லாம் டாய்லெட் பேப்பர் எல்லா பெரிய அலுவலகங்களிலும் வீட்டிலும் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் ஆயுர்வேதத்தின் படி, டாய்லெட் பேப்பர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதன் காரணமாக, மியூகோசல் திசுக்கள் சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே, டாய்லெட் பேப்பருக்குப் பதிலாக தண்ணீரைப் பயன்படுத்துவது நன்மை தரும் என்று டாக்டர் ரேகா ராதாமோனி குறிப்பிடுகிறார்.

இந்த பதிவும் உதவலாம்:பெண்கள் பொது கழிப்பிடத்தை பயன்படுத்துவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP