15 கிலோ எடையை 40 நாட்களில் குறைத்த நடிகை ஐஸ்வர்யா; டயட் செய்த மாற்றம்

90களில் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் தனது உடல் எடை இழப்பு பயணம், அழகுக்குறிப்பு பற்றி கலகலப்பாக சில தகவல்களை பகிர்ந்துள்ளார். 40 நாட்களில் 15 கிலோ எடையை உணவுமுறை மாற்றத்தால் குறைத்து இருக்கிறார்.
image

1990களில் தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் டாப் நடிகையாக வலம் வந்த ஐஸ்வர்யா பாஸ்கரனை எல்லோருக்கும் நினைவு இருக்கும். பாக்யராஜின் ராசுக்குட்டி, சுயம்வரம் உட்பட 30-40 படங்களுக்கு மேலாக நடித்திருக்கிறார். திருமணத்திற்கு திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்திலும், சீரியலில் பிரதான ரோல்களிலும் நடித்து வருகிறார். 2018ல் தனது உடல் எடை 90 கிலோவை எட்டியதை அடுத்து உணவுமுறையில் மாற்றம் செய்து அதன் பலன்களை உடனடியாகவும் பெற்றுள்ளார். ஐஸ்வர்யா பாஸ்கரனின் உடல் எடை இழப்பு பயணம் மற்றும் அழகுக்குறிப்பு பற்றி தெரிந்து கொள்வோம்.

40 நாட்களில் 15 கிலோ எடை குறைப்பு - ஐஸ்வர்யா

2018ல் தாவரம் சார்ந்த உணவுமுறைக்கு மாறினேன். அதன் பிறகு எனது உடலில் பல மாற்றங்கள் தெரிந்தன. பால் பொருட்கள், ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்தேன். பெண்களின் உடல் 10 வருடங்களுக்கு ஒரு முறை மாறி கொண்டே இருக்கும். உடல் சொல்வதை எப்போதும் கேட்க வேண்டும். 6 மணிக்கு மேல் பசிக்கவில்லை என்றால் வலுக்கட்டாயமாக உணவை திணிக்க கூடாது. இதன் விளைவாக 40 நாட்களில் 15 கிலோ எடையை குறைக்க முடிந்தது.

எடை இழப்புக்கு உதவிய யோகா - ஐஸ்வர்யா

அதன் பிறகு யோகா பயிற்சியை தொடங்கினேன். முட்டி, கழுத்து, இடுப்பு தொடர்பான பிரச்னைகளை சரி செய்ய முடிந்தது. அதிக உடல் எடையில் இருந்த போது stomach stappling செய்ய அறிவுறுத்தினார்கள். மருத்துவரின் ஆலோசனையை பெற்று முறையாக எடையைக் குறைத்தேன். யோகாவை முறையாக கற்றால் மீண்டும் எடை ஏறுவதற்கு வாய்ப்பே கிடையாது. நீங்கள் நினைத்தாலும் எடை ஏற விடாது. யோகா குருவிடம் சென்று யோகா கற்க ஆரம்பியுங்கள். யூடியூப் வீடியோ, புத்தகம் பார்த்து யோகா செய்யாதீர்கள்.

அகத்தின் அழகு முகத்தில் - ஐஸ்வர்யா

அந்த காலத்தில் நாங்கள் அதிகளவு அலங்கார பொருட்களை பயன்படுத்தவில்லை. எனக்கு எப்போதும் சோப்பு, தண்ணீர் இருந்தால் அடிக்கடி முகம் கழுவுவேன். ஒரு முறை மட்டும் ஆக்ஸிஜன் பேஷியல் செய்தேன். அதுவும் நடிக்கும் போது செய்தத்தில்லை. அழகை பராமரிக்க சாப்பிடும் சாப்பாடு, மனநலன் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் முக்கியம். சரும பராமரிப்பில் கவனம் செலுத்த தொடங்கினாலே தலைமுடியையும் நன்றாக பராமரிக்கலாம்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP