சிசேரியனுக்கு பிறகு வயிறு பெரிதாகி விட்டதா? இந்த யோகாசனங்கள் செய்து எளிதாகக் குறைத்திடலாம்!

சிசேரியனுக்கு பிறகு உங்கள் வயிற்றில் கொழுப்பு சேர்ந்திருந்தால், நிபுணர்கள் கூற்றுப்படி இந்த  யோகாசனங்களை செய்யலாம்.

c section big

ஒரு பெண்ணுக்குத் தாய்மையை விடச் சிறந்த பரிசு இருக்க முடியாது.முதன்முறையாகத் தன் குழந்தையின் விரல்களைப் பிடிப்பது, தூக்கி அரவணைப்பது என அனைத்துமே சொல்லில் அடங்கா மகிழ்ச்சியை தரும்.பிரசவத்திற்கு பிறகு ஒரு பெண்ணின் உடலில் குறிப்பிடத் தக்க உடலியல் மாற்றங்கள் ஏற்படும்.

கர்ப்பத்திற்கு முன் இருந்தது போல உடலமைப்பை திரும்பபெறுவதற்கு நேரமும், முயற்சியும் தேவை. நார்மல் டெலிவரியை விட சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு முந்தைய உடலமைப்பை பெறுவது மிகவும் சவாலான விஷயம். தையல்கள் கலைந்து, சிசேரியன் செய்த காயம் குணமாகும் வரை காத்திருந்து, பிறகு உடற்பயிற்சியை தொடங்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

உடற்பயிற்சிகளில், யோகா இதற்குப் பயனுள்ளதாக இருக்கும்.பிரசவத்திற்குப் பிறகு முந்தைய உடல் வடிவத்திற்கு திரும்புவதற்கு பாதுகாப்பான வழி யோகாவாகும். இந்த பதிவில், யோகா நிபுணர் திரு.அபிஷேக் ஓட்வால் அவர்கள் சிசேரியனுக்கு பிறகு வயிற்றை வலுப்படுத்துவதற்கான யோகாசனங்களை பற்றிக் கூறியுள்ளார். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உடலமைப்பைத் திரும்பப் பெறுவதற்கான யோகாசனங்கள்

யோகா மூலமாகப் பாதுகாப்பாகவும் எளிதாகவும் முந்தைய உடல் வடிவத்தைப் பெற முடியும்.பெண்கள் பிரசவம் முடிந்து, 8 முதல் 10 வாரங்களுக்குப் பிறகு யோகா செய்யத் தொடங்கலாம்.

எப்போது யோகா செய்வதாக இருந்தாலும், உங்கள் கழுத்து, கைகள், தோள்பட்டைகள், முழங்கால்கள் மற்றும் கணுக்கால் ஆகியவற்றை நீட்டி மடக்கி ஸ்ட்ரெட்ச் செய்யவும். ஸ்ட்ரெட்ச் செய்யும்போது நீங்கள் சரியாகச் சுவாசிக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஸ்ட்ரெட்ச் செய்து முடித்தபிறகு யோகா செய்யத் தொடங்கலாம்.

உஸ்த்ராசனம்

ustrasana

இந்த ஆசனம் சிறுநீரகத்துடன் சேர்த்து அனைத்து உறுப்புகளையும் சீர் செய்வதால், நிபுணரின் வழிகாட்டுதலோடு பயிற்சி செய்வது நல்லது. இது உடல் உறுப்புகளுக்கு தூய்மையான இரத்தத்தை அனுப்பி, ஆக்சிஜனேற்றம் செய்து நச்சு நீக்கம் செய்வதால், சிசேரியனுக்கு பிறகு ஏற்படும் தொப்பையை குறைக்க உதவியாக இருக்கும்.

கந்தராசனம்

kandharasana

இந்த ஆசனம் சுவாசப் பாதைகளைத் திறந்து, வயிற்றுப் பகுதி மற்றும் இடுப்புப் பகுதியின் தோற்றத்தைச் சீராக்கி, பெண்ணின் இனப்பெருக்க உறுப்பையும் பலப்படுத்துகிறது.

செங்குத்து விரிவாக்க பத்மாசனம்

இந்த ஆசனம் அடிவயிறு மற்றும் இடுப்பு பகுதியின் தசைகளுக்கானது.இது முதுகின் கீழ் பகுதியைப் பலப்படுத்துகிறது, வயிற்று தசைகளைச் சீராக்கி உடற்கட்டை மேம்படுத்துகிறது.

தடாசனம்

tadasana

சிசேரியனுக்கு பிறகு உடல் எடை குறைப்பதற்கு ஏற்றது தடாசனம்.இது இரத்த ஓட்டம் மற்றும் உடற்கட்டை மேம்படுத்துகிறது. உடல் வலிமை பெறுவதற்கு இந்த ஆசனம் செய்யலாம்.

திரிகோனாசனம்

trikonasana

சிசேரியனுக்கு பிறகு பெண்களுக்காக பரிந்துரைக்கப்படும் ஆசனங்களில் திரிகோனாசனமும் ஒன்றாகும், இது தொப்பையை குறைத்து, இடுப்பை மெலிதாக்குகிறது. இந்த ஆசனம் முதுகெலும்பு, தொடை எலும்புகள் மற்றும் கெண்டைக்காலுக்கு அதிகபட்ச ஸ்ட்ரெட்ச் கொடுப்பதால் கீழ் உடல், கைகள் மற்றும் மார்பை வலுப்படுத்த உதவுகிறது.இது செரிமானக் கோளாறுகளைச் சீர்செய்கிறது.மேலும், பொதுவாகப் பிரசவத்திற்குப் பின் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தம் மற்றும் பதட்டத்தையும் நீக்குகிறது.

நவாசனம்

navasana

இந்த ஆசனம் சிசேரியனுக்கு பிறகு உடல் எடை குறைப்பதற்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது.இந்த ஆசனம் வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும், செரிமானம் தொடர்பான பல நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மேலும், உடற்பயிற்சி செய்வதற்கு அதிக நேரம் கிடைக்காத சமயங்களில், வயிறு மற்றும் தொடைகளின் தசைகளை வலுப்படுத்த நவாசனம் செய்யலாம்.

புஜங்காசனம்

bhujangasana

புஜங்காசனம் உங்கள் வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். இந்த ஆசனம் படிப்படியாகத் தோள்கள், அடி வயிறு மற்றும் மார்பில் உள்ள தசைகளைச் சீராக்கி, கீழ் முதுகில் உள்ள விறைப்பைக் குறைக்கிறது. மேலும், உங்கள் கைகள் மற்றும் தோள்களைப் பலப்படுத்துகிறது.

பிராணயாமம்

pranayama

இறுதியாக நாம் பார்க்க போவது பயனுள்ள மற்றும் எளிதான பிராணயாமம் எனும் சுவாசப் பயிற்சியை தான். இது அடிவயிற்றில் போதுமான அழுத்தத்தை அளிப்பதால் சிசேரியனுக்கு பிறகு ஏற்பட்ட தொப்பையைக் குறைக்க உதவுகிறது. பிராணயாமம் செய்து மனதையும் அமைதிப்படுத்தலாம்.

பிரசவத்திற்குப் பிறகு காலைச் சுகவீனம், இடுப்பைச் சுற்றி வலி, எடை அதிகரிப்பு மற்றும் கவலை போன்ற பல உடல் மற்றும் மன நலம் சார்ந்த பிரச்சனைகளைப் பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். சத்தான உணவுடன், சில யோகாசனங்களும் செய்யும்பொழுது இந்தப் பிரச்சனைகளை உங்களால் சமாளிக்க முடியும். யோகா செய்வதால் உடல் வடிவம் பெறுவதோடு, மனமும் அமைதியடையும். உடல் மற்றும் ஆன்மா அமைதிப்படுத்தப்படுவதால் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தையும் நம்மால் சமாளிக்க முடியும்.

மேற்கூறிய யோகாசனங்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தாலும், இந்த ஆசனங்களைச் சான்றளிக்கப்பட்ட யோகா பயிற்சியாளரிடமிருந்து கற்றுக் கொண்டு பிறகு வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து செய்வது நன்மை பயக்கும். இதுவே சரியான முறையாகும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP