கச்சிதமான உடல் அமைப்புக்கு நடிகை ரெஜினா கசாண்ட்ரா கொடுக்கும் டிப்ஸ்

விடாமுயற்சி நாயகிகளில் ஒருவரான நடிகை ரெஜினா கசாண்ட்ரா கச்சிதமான உடல் அமைப்பு கொண்டவர். வசீகரமான உடல் தோற்றம் கொண்ட ரெஜினா தனது உடற்பயிற்சி திட்டத்தையும், உணவுமுறையையும் ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.
image

சென்னை பெண்ணான நடிகை ரெஜினா கசாண்ட்ரா 2005ல் திரையுலகிற்குள் நுழைந்தவர். விடாமுயற்சி திரைப்படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். சில நடிகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு படங்களுக்கு ஏற்ப உடல் அமைப்பை மாற்றிக் கொள்வர். ஆனால் ரெஜினா கசாண்ட்ரா திரையுலகிற்கு வந்த நாள் முதல் இன்றுவரை வசீகரமான தோற்றத்துடன் வலம் வருகிறார். வழக்கமான உடற்பயிற்சிகளை செய்தாலும் ரெஜினா கசாண்ட்ரா உடல் அமைப்பை ஒரே மாதிரி வைத்திருப்பது ரசிகர்களை வியக்க வைக்கிறது.

regina cassandra fitness plan

ரெஜினா கசாண்ட்ரா உடற்பயிற்சி

ரெஜினா கசாண்ட்ரா சுழற் பயிற்சி செய்யக்கூடியவர். அதாவது ஒரு நாள் உடலின் மேல் பகுதியை வலுப்படுத்த பயிற்சி செய்தால் மறுநாள் உடலின் கீழ் பகுதியில் கவனம் செலுத்துவார். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது ரெஜினா கசாண்ட்ராவின் வழக்கமாகும். காலை நேரத்தில் பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் உடற்பயிற்சி செய்யக்கூடியவர். ஜிம் செல்லும் பழக்கமும் நடிகை ரெஜினா கசாண்ட்ராவுக்கு உண்டு.

யோகாவும் ரெஜினாவும்

ரெஜினா கசாண்ட்ராவையும் யோகாவையும் பிரிக்க முடியாது என்றே சொல்லலாம். யோகா செய்வதை அவர் என்றுமே தவறவிட்டதில்லை. ரெஜினாவின் உடல் நளினத்திற்கு யோகா முக்கிய காரணம் ஆகும். சூரிய நமஸ்காரத்தில் தொடங்கி புஜங்காசனம், சர்வாங்காசனம் வரை உடலை வலிமையாக வைத்திருக்கும் யோகாசனங்களை தொடர்ந்து செய்கிறார். அவரது இன்ஸ்டா பக்கத்தில் யோகா செய்யும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

ரெஜினா கசாண்ட்ராவின் உணவுமுறை

வசீகரமான உடல் அமைப்பு கொண்டிருந்தாலும் ரெஜினா கசாண்ட்ரா பிடித்ததையே சாப்பிடுகிறார். அடிக்கடி தண்ணீர் குடிக்கும் பழக்கம் ரெஜினாவுக்கு உண்டு. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கிட வாரம் ஒரு முறை ஒரு நாள் முழுவதும் பழச்சாறு மட்டுமே குடிக்கிறார். அதே போல இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வெறும் வயிற்றில் கற்றாழை தோல் நீக்கி ஜெல் சாப்பிடுகிறார். இது தனது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுவதாக ரெஜினா குறிப்பிடுகிறார். தினமும் 100 கிராம் புரதச்சத்து எடுத்துகொள்வது ரெஜினாவின் வழக்கம்.

ரெஜினாவின் காலை உணவுகள்

  • மசாலா டீ, ஏலக்காய் டீ
  • பழச்சாறு, பாதம் போன்ற நட்ஸ் (தோல் நீக்கப்பட்டவை)
  • முளைகட்டிய பயறு வகைகள், பழங்கள்
  • இட்லி, தோசை, சாம்பார்

மேலும் படிங்கநடிகர் மாதவனா இது ? உடற்பயிற்சி இன்றி 21 நாட்களில் தொப்பை குறைப்பு

ரெஜினாவின் மதிய உணவுமுறை

  • கார்போஹைட் அதிகளவில் உள்ள உணவுகளை ரெஜினா சாப்பிடுகிறார். மதிய உணவில் பீன்ஸ், கேரட், வேக வைத்த காய்கறிகள் அடங்கும்.
  • அதிக எண்ணெய் கொண்ட உணவுகளை ரெஜினா விரும்புவதில்லை. இரவு நேரத்தில் மிகக் குறைவாகவே சாப்பிடுகிறார்.

ரெஜினா கசாண்ட்ரா போல் அழகான வசீகரமான உடல் அமைப்பு வேண்டும் என நீங்கள் நினைத்தால் அவருடையை உணவுமுறையையும், உடற்பயிற்சி திட்டத்தையும் பின்பற்றலாம்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP