தமிழ் சினிமாவின் ரெட்ரோ ஹீரோயின்களில் நடிகை குஷ்பு மறக்க முடியாதவர். இவருக்கு தமிழகத்தில் கோயில் கட்டி வழிபட்ட ரசிகர்களும் உண்டு. தொடக்கத்தில் மெல்லிய தோற்றத்தில் இருந்த குஷ்பு சில காலங்களுக்கு பிறகு உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். அப்போதும் ரசிகர்கள் அவர் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தனர். ஒரு படத்தில் குஷ்பு இட்லி கிடைக்குமா என்ற வசனமும் இடம்பெற்றது. பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு வருகை தந்த குஷ்புவுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. கொழு கொழுவென காணப்பட்ட குஷ்பு சில ஆண்டுகளுக்கு முன் திடீரென உடல் எடையை பலமடங்கு குறைத்து மெல்லிய தோற்றத்தில் காணப்பட்டார். சின்னத் தம்பி குஷ்புவை மீண்டும் பார்ப்பது போல் தோன்றியது. இந்த நிலையில் 20 கிலோ எடை குறைப்பு இரகசியத்தை நடிகை குஷ்பு நம்முடன் பகிர்ந்துள்ளார்.
எனக்கு இனிப்புகள் என்றால் மிகவும் பிடிக்கும். எங்காவது ஸ்வீட் பார்த்தால் உடனடியாக எடுத்து சாப்பிட்டு விடுவேன். எடையைக் குறைத்தாலும் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தவுடன் இரண்டு மடங்கு எடை அதிகரித்துவிடுவேன். அப்போது தான் என்னுடைய உடலைப் பற்றி நானே புரிந்து கொண்டேன். எனக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் கிடையாது. எனினும் மூட்டு பிரச்னையால் அவதிப்பட்டேன். மூன்று முறை மூட்டில் அறுவைசிகிச்சை செய்துவிட்டேன். இதையடுத்து மருத்துவர் என்னிடம் மூட்டு பிரச்னைக்காக உடல் எடையைக் குறைக்க அறிவுறுத்தினார்.
தினமும் நடைபயிற்சி செல்ல ஆரம்பித்தேன். சாப்பாட்டை கண்ட்ரோல் செய்தேன். இனிப்புகளை தவிர்த்தேன். சென்னையில் இருந்தால் 15 ஆயிரம் அடிகள் அதாவது 10 முதல் 12 கிலோ மீட்டர் தூரம் நடப்பேன். வெளியூரில் 20 கிலோ மீட்டர் தயங்காமல் நடந்தேன். டீ குடிப்பதை என்னால் தவிர்க்க இயலாது. சூட்டிங் இருந்தால் ஒரு நாளைக்கு 3 டீ குடிப்பேன். மோர், இளநீர் போன்ற திரவங்கள் அதிகம் குடிக்க ஆரம்பித்தேன். இனிப்பு காரணமாக பழச்சாறு குடிப்பதில்லை. பகுதி பகுதியாக சாப்பிடும் வழக்கத்திற்கு மாறினேன். குஷ்பு இட்லி மாதிரி இருந்தால் நல்லா இருக்கும் என விரும்பினார்கள். ஆனால் அந்த உடல் தோற்றம் நாளடைவில் கொடுக்கும் பிரச்னை பிறகு தான் தெரியவந்தது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com