
சேலை மீது பெண்களுக்கு இருக்கும் மோகம் என்றுமே தீராது. ஏனென்றால், காலம் காலமாக புடவையை பெண்கள் உடுத்தி வருகிறார்கள். புடவையை அணியும் ஒவ்வொரு பெண்ணும் மிகவும் அழகாக இருக்கிறார்கள். சந்தையில் எப்போதும் புதிய புடவை டிசைன்கள் வந்துகொண்டே தான் இருக்கிறது. பல சமயங்களில் பெண்களுக்கு கனமான புடவைகள் உடுத்துவது பிடிப்பதில்லை. இது போன்ற சூழலில், அவர்கள் தங்கள் அலமாரியில் எளிமையான, லேசான சேலைகளையே தேடுகிறார்கள். தற்போது பெண்கள் மத்தியில் எளிமையான புடவை அதிகமாக விரும்பப்படுகிறது. பல நடிகைகள் கூட தற்போது அத்தகைய புடவைகளையே தேர்வு செய்கின்றனர். அப்படிப்பட்ட எளிமையான, லேசான சிறந்த புடவைகள் எவை என்பதை நாம் பார்ப்போம்.

தற்போது, ரஃபிள் புடவை ஃபேஷன் டிரெண்டில் உள்ளது. சிறந்த அம்சம் என்னவென்றால், இந்த வகை புடவை மிகவும் அழகாக இருக்கிறது. இது தோற்றத்திற்கு ஒரு புதுமையை சேர்க்கிறது. பல்வேறு வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளுடன் இந்தப் புடவையை ஆன்லைனில் பெறலாம். ஆனால் இப்போதெல்லாம் ஃப்ளோரல் பிரிண்ட் ஃபேஷன் டிரெண்டிங்கில் உள்ளது. கீர்த்தி சுரேஷின் இந்த ஃப்ளோரல் பிரிண்ட் புடவையை நீங்கள் எல்லா விழாக்களுக்கும் அணியலாம்.

நடிகை மாதுரி தீட்சித் கட்டும் சேலைகள் மிகவும் அருமையாக இருக்கும். எளிமையான புடவை டிசைன்கள் முதல் கனமான எம்பிராய்டரி வரை அனைத்து விதமான புடவைகளையும் நடிகை மாதுரி தீட்சித் அடிக்கடி கட்டுகிறார். மாதுரியின் பேட்டர்ன் டிசைன் புடவையுடன் கூடிய இந்த நீல நிற கோடு மிகவும் அருமையாக உள்ளது. இந்த வகை புடவையின் சிறப்பு என்னவென்றால், நீங்கள் அதை அணிந்தால் ஒல்லியாக தெரிவீர்கள். மேலும் நீங்கள் எளிதாக எடுத்துச் செல்லலாம்.

நந்திதாவின் இந்த இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற புடவை மிகவும் அழகாக இருக்கிறது. இந்த சேலையில் சீக்வின் எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளது. இரவில் நடக்கும் விழாக்களுக்கு இந்த வகை புடவைகளை உடுத்திச் செல்லலாம். இருப்பினும், நீங்கள் விரும்பினால், பிளவுசுக்கு காண்ட்ராஸ்ட் கலரையும் முயற்சி செய்யலாம். இது உங்கள் புடவையை வித்தியாசமாக காட்டும். நந்திதா அவர்கள் லேசான ஒப்பனை செய்துள்ளார். ஒரு நேர்த்தியான தோற்றத்திற்கு, நீங்கள் இவ்வாறு முயற்சி செய்யலாம்.

சிம்பிள் புடவை என்று வரும்போதெல்லாம், கருப்புச் சேலையை எப்படி நினைக்காமல் இருக்க முடியும். சுபலக்ஷ்மி ரங்கனின் இந்த கருப்பு புடவை தோற்றம் முற்றிலும் ஆச்சரியமாக இருக்கிறது. கடைகளில் இந்த வகை புடவைகளை நீங்கள் எளிதாகக் காணலாம். விருந்துகளுக்கு இந்த வகையை நீங்கள் அணியலாம். கருப்பு நிற சேலையுடன் கூடிய V வடிவ நெக் பிளவுஸையும் அணியலாம். சோக்கர் நெக்லஸ் போட்டால் நன்றாக இருக்கும். மேலும் கருப்பு பொட்டு உங்கள் அழகை மேம்படுத்தும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com