
இந்தியாவில் மெஹந்தியை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. கைகள் மற்றும் கால்களில் மெஹந்தி வரைவுது நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களுடன் இணைக்கப்படுகிறது. இந்த மெஹந்தி வடிவமானது மணப்பெண்கள் கைகள் மற்றும் கால்களில் வரையும் போது முழுமையை அடைகிறது. இந்திய திருமண நிகழ்வுகளில் மெஹந்தி விழா என்று ஒரு தனிப்பட்ட நாளாகவே கொண்டாடப்படுகிறது. திருமணத்திற்கு தயாராக இருக்கும் மணப்பெண்களும், அவர்களின் உறவு பெண்களும் தங்கள் கைகளை அலங்கரிப்பார்கள்.
திருமண பெண்கள் பிரைடல் மெஹந்தி வடிவமைப்புகளை தேர்வு செய்வதில் இன்று வரை குழப்பம் அடைகிறார்கள். அசத்தலான 5 மெஹந்தி டிசைன்களை பார்க்கலாம்.
அரபிக் மெஹந்தி டிசைன் திருமண பெண்கள் அதிகம் விரும்பும் வடிவங்களில் ஒன்றாகும். பாரம்பரிய இந்திய மெஹந்தி டிசைன்கலை ஒப்பிடும்போது வேலைப்படுகளை குறைவானது, ஆனால் பார்க்க பிராமண்டமாக இருக்கும். இந்த டிசைகள் திருமண பெண்கள் அணியும் ஆடைகளுக்கு ஏற்றதாக இருக்கும், அதவது பட்டு சேலைகள் மற்றும் லெகங்கா தோற்றத்திற்கு பொருத்தமாக இருக்கும்.

Image Credit: pinterest
இரண்டு கைகளுக்கும் ஒரே மாதிரியான வடிவமைப்புகளை வரைவது ஒருங்கிணைந்த மெஹந்தி டிசைன் என்று அழைக்கப்படுகிறது. பிரைடல் மெஹந்தி டிசைன்களில் இது யூனிபார்ம் வடிவம் என்று சொல்லலாம். இது பார்க்க அழகாகவும், நேர்த்தியாகவும் உருவாக்கப்படுகிறது.

Image Credit: pinterest
பெண்களுக்கு திருமண நிகழ்வு, சீமந்தம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டும் முழுங்கைகள் வரை மெஹந்தி டிசைன்களை அனுபவிக்க முடியும். இதை வடிவங்களை பார்த்துக்கொண்டே இருக்க தொன்றும். எளிதில் நமது கைகளில் இது போன்ற அழகிய வடிவங்களை பார்க்க முடியாது.

image Credit: pinterest
பாரம்பரிய உருவங்கள், மலர்கள், இதழ்கள் அல்லது சின்னங்களைக் கொண்ட திருமண மெஹந்தி வடிவமைப்புகளை வரைவது சிம்பாலிக் டிசைன். ராஜா ராணி வடிவம் மற்றும் குழந்தை வடிவம் இதுபோன்று சில நிலழ்வுகளை மையமாக கொண்டு வரையப்படுவது.

Image Credit: pinterest
எளிமையான வடிவமைப்புகளுடன் பார்த்தால் மனதை கவரும் வடிவில் அமைக்கப்படுவது இந்த வகையான மெஹந்தி டிசைன்கள், எளிமையாக இருக்க விரும்பும் பெண்களுக்கு இந்த வடிவமைப்புகள் ஏற்றவையாக இருக்கும்.

Image Credit: pinterest
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: pinterest
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com