
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 4 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் கொண்டாடப்படும் மிகப் பெரிய பண்டிகையாக பொங்கல் உள்ளது. குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து சூரியனுக்கு நன்றி சொல்லி பொங்கல் வைக்கும் இந்த பழக்கம் தமிழர்களின் மரபுடன் இணைந்தது. இந்த நாளில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் புத்தாடை அணிந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
குறிப்பாக பெண்கள் பொங்கல் பண்டிகைக்கு பட்டுச்சேலை, பாவாடை தாவணி, புடவை போன்ற பாரம்பரியமான ஆடைகளை அதிகம் தேர்வு செய்கின்றனர். என்னதான் ஃபேஷன் உலகில் வெஸ்டர்ன் ஆடைகள் முன்னிலையில் இருந்தாலும் ஒரு பண்டிகை என்று வந்தால் பெண்களின் முதல் விருப்பம் ட்ரெடிஷனல் தான். அந்த வகையில் 2023 பொங்கல் ஸ்பெஷலாக, பெண்களுக்காகவே சந்தையில் களமிறயிருக்கும் ட்ரெண்டிங் மற்றும் ட்ரெடிஷனல் ஆடைகளின் லிஸ்டை இப்போது பார்ப்போம்.
இந்த பொங்கலுக்கு புடவை அணிய விரும்புவர்கள் பனராசி பட்டை நிச்சயம் தேர்வு செய்யலாம். பண்டிகை காலத்துக்கு ஏற்ற லுக், கலர்ஃபுல்லான டிசைன்கள் ஆகியவை காண்பவர்களின் கண்ணை பறிக்கும். அதிலும் குறிப்பாக, சில்வர் மற்றும் கோல்ட் பனராசி பட்டுக்கள் ட்ரெடிஷனலாக இருக்கும். அதே சமயம் ஃபேஷனில் ஐகானிக் லுக்கையும் தரும். இளம் பெண்கள் பனராசி பட்டுடன் கிராண்ட் ஆரி டிசைன் பொருந்திய பிளவுஸை தேர்வு செய்து அணீயலாம்.
இந்த பதிவும் உதவலாம்:குழந்தைகளுக்கான பாரம்பரிய பொங்கல் ஆடைகள்
மற்ற எல்லா ஆடைகளை விடவும் பெண்கள் பாவாடை தாவணியில் தனி அழகில் ஜொலிப்பார்கள். தென்னிந்தியாவில் கோயில் திருவிழா, விசேஷ நாட்களில் இளம் பெண்களை கட்டாயம் பாவாடை தாவணியில் பார்க்கலாம். இப்போது அதிலும் ஏகப்பட்ட வெரைட்டிகள், டிசைன்கள் வந்து விட்டன. அந்த வகையில் இந்த பொங்கலுக்கு பனாரசி தாவணி செட் அட்டகாசமான லுக்கை தரும்.
குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் ஷிஃபான், ஜார்ஜெட் போன்ற மெட்டீரியல்களில் ஹாஃப் சாரியை தேர்வு செய்யாமல் பனாரஸ் துப்பட்டாவை தேர்வு செய்தால் ட்ரெடிஷனலாகவும் இருக்கும் அதே சமயம் ட்ரெண்டிங்காகவும் தெரியும்.

இந்த பொங்கலுக்கு சந்தையில் பெண்களுக்காகவே அறிமுகமாகி இருக்கும் ஆடைகளில் ஃபியூஷன் புடவையும் ஒன்று. தல பொங்கல் கொண்டாடுபவர்கள் ஜோடியாக ஃபியூஷன் புடவை மற்றும் ஃபியூஷன் ஷர்ட் அணியலாம். அதே போல் பெண் குழந்தைகளுக்கு ரஃபல்ஸ் டிசைனுடன் வந்திருக்கும் கலக்கல் கவுன், முழு நீள அனார்கலி இப்போது ட்ரெண்டிங் லிஸ்டில் உள்ளது. இந்த பொங்கலுக்கு வழக்கமான ஆடைகளை தேர்வு செய்யலாம் சற்று வித்தியாசமாக ட்ரெண்டிங் ஃபேஷனுடன் சேர்ந்து உடை அணிந்து பாருங்கள், கட்டாயம் அழகில் ஜொலிப்பீர்கள்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த கருநீல ஆடைகள் உங்களை மிக ஸ்டைலாக மாற்றிவிடும்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com
