Blouse Neck Design: காட்டன் புடவைகளில் உங்களை டிரெண்டியாக்கும் ப்ளவுஸ் டிசைன்கள்!

காட்டன் புடவைகளைத் திருமணமான பெண்கள் மட்டுமல்ல. தற்போது கல்லூரி மற்றும் பணிக்கு செல்லக்கூடிய பெண்கள் அனைவரும் பயன்படுத்துகின்றனர்

trendy blouse designs for ladies

பெண்களுக்கு சேலை அணிவது தனி அழகு. 200 ரூபாய் முதல் லட்ச ரூபாய் வரை அவரவர்களுக்கு ஏற்றவாறு புடவைகளை அணிவதைப் பார்த்திருப்போம். சேலை பாரம்பரிய உடை என்றாலும், அதற்கு ஏற்ற அணிகலன்கள் மற்றும் ப்ளவுஸ் டிசைன்களைப் போடும் போது நீங்கள் டிரெண்டியாக தெரிவீர்கள். இன்றைய பெண்களிடையே பட்டு புடவைகளை விட காட்டன் புடவைகளின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. புடவைகள் நெய்யும் இடத்திற்கு நேரடியாக சென்று வாங்கும் பழக்கமும் பல பெண்களிடம் உள்ளது. இதோடு நிறுத்திவிடுவதில்லை. அதற்கு என்ன மாடல் ப்ளவுஸ் தைக்கலாம் என கூகுளில் தேடவும் செய்வார்கள். இது போன்ற லிஸ்டில் நீங்களும் இடம் பெற்றிருக்கிறீர்களா? இதோ காட்டன் புடவைகளில் உங்களை அழகாக்கும் சில டிசைன்களில் லிஸ்டில் இங்கே…

latest blouse desings

காட்டன் புடவைகளுக்கான ப்ளவுஸ் டிசைன்கள்

  • காட்டன் புடவைகளுக்கு போட் நெக் (boat neck) டிசைன் பெண்களிடையே அதிகமாக விரும்பப்படுகிறது. கலம்கரி காட்டன் முதல் சாதாரண காட்டன் புடவைகளுக்குக் கூட போட் நெக் டிசைன்களில் ப்ளவுஸ்களை நீங்கள் தேர்வு செய்துக் கொள்ளலாம். மேலும் காட்டன் புடவையில் உள்ள ஜாக்கெட்டுகளைத் தேர்வு செய்வதற்கு பதிலாக நீங்கள் கான்ட்ராஸ்ட் கலர்களில் ப்ளவுஸ்களை எடுத்து தைக்கலாம். இது உங்களை மிகவும் ஸ்டைலில்லாக காட்டும்.போட் நெக் டிசைன்களுக்கு நீங்கள் பின்புறமும் சில டிசைன்களையும் வைத்துக் கொள்ளலாம்.
kalamkari blouse
  • காட்டன் புடவைகளைப் பார்ப்பதற்கு சிம்பிளாகத் தான் தெரியும். நீங்கள் தைக்கும் பள்வுஸ் டிசைன்கள் தான் உங்களின் மதிப்பைக் கூட்டிக்காட்டும். எனவே ப்ளவுஸ் டிசைன்களில் நல்ல படியாக தேர்வு செய்ய வேண்டும். போட் நெக்கிற்கு அடுத்தப்படியாக காட்டன் புடவைகளுக்கு காலர் வைத்து தைக்கலாம். கழுத்தை ஓட்டிய சைனிஸ் கார்லர் நெக் ப்ளவுஸ் உங்களை கூடுதல் அழகாக்கும்.
  • பெண்கள் காட்டன் புடவைகளைத் தேர்வு செய்யும் போது, புடவைக்கு கலருக்கு ஏற்ற லேஸ் ஒர்க் செய்துக் கொள்ளுங்கள்.
  • ப்ளவுஸின் பின்புறம் பெரிய வட்ட வடிவிலான டிசைன்கள், கிராஸ் லைன் கொண்ட கட்டங்கள், கழுத்து மற்றும் கைகளில் பால்ஸ் டிசைன்கள், போட் நெக் வைப்பது பின்புறம் ஜிப் அல்லது பட்டன்களை வைத்துத் தைக்கலாம். மேலும் காட்டன் புடவைகளுக்கு ஒரு கோடிட்ட அல்லது செக்கர் காட்டன் பிளவுஸை நீங்கள் தேர்வு செய்யலாம்.
boat neck designs

காட்டன் புடவைகளைத் திருமணமான பெண்கள் மட்டுமல்ல. தற்போது கல்லூரி மற்றும் பணிக்கு செல்லக்கூடிய பெண்கள் அனைவரும் பயன்படுத்துகின்றனர். எனவே இனி வரும் காலங்களில் இது போன்ற டிசைன்களைத் தேர்வு செய்துக் கொள்ளுங்கள். பாரம்பரிய உடையிலும் கூட இந்த ப்ளவுஸ் டிசைன்கள் அனைத்தும் உங்களை ஸ்டைலிஸ்ஸாக மாற்றக்கூடும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP