முகத்தின் வடிவத்திற்கு ஏற்ப லிப்ஸ்டிக் வாங்கலாம் என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? இந்த எண்ணம் உங்கள் மனதில் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. இப்போதெல்லாம் எல்லாப் பெண்ணும் அழகுசாதனப் பொருட்கள் மீது ஆசை கொண்டு தேடி தேடி வாங்குகிறார்கள். அப்படி வாங்கும் உங்களுக்கு முகத்திற்கு ஏற்ற நிறத்தில் வாங்கி பயன்படுத்துவது எளிதாக இருக்கும். அது ஒரு கடையாக இருந்தாலும் சரி, ஆன்லைன் வலைத்தளமாக இருந்தாலும் சரி. ஆனால் சில நேரங்களில், அவற்றை வாங்குவது நீங்கள் நினைப்பது போல் எளிதானது அல்ல.
மேலும் படிக்க: அழகுக்கு அழகு சேர்க்க மகா சிவராத்திரி வழிப்படும் பெண்கள் அணியக்கூடிய பட்டு புடவை வகைகள்
அழகுசாதனப் பொருட்களை வாங்குவதற்கு முன், உங்கள் சரும வகை முதல் அவற்றை அணிய வேண்டிய செயல்பாடு வரை அனைத்திலும் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் ஷாப்பிங் செய்யும்போது இந்த விதிகளைப் பின்பற்றுகிறார்கள். இப்போது நீங்கள் லிப்ஸ்டிக் வாங்குவது பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுடைய இந்தப் பிரச்சனை குறித்து ஒப்பனை மற்றும் சிகை அலங்கார நிபுணர் அமெலியா தஸ்வானி பல முக்கியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார், அதை நீங்கள் உங்கள் முக வடிவத்திற்கு ஏற்ப பின்பற்றலாம்.
வட்ட முகம் கொண்ட பெண்களின் உதடுகள் மிகவும் அழகாக இருக்கும். உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ப பாப் நிறத்தை நீங்கள் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும். இதற்கு முதலில் உதடுகளுக்கு வெளியே அரை சென்டிமீட்டர் தல்லி லைனரைப் பயன்படுத்த வேண்டும். இதைச் செய்வதன் மூலம் முழு உதடுகளின் தோற்றம் எடுப்பாக தெரியும். இதனுடன் உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ப நிறத்தை பயன்படுத்தினால் மேலும் சிறப்பாக இருக்கும்.
இதய வடிவிலான முக அமைப்பைக் கொண்ட பெண்கள் பொதுவாக அகன்ற தாடையைக் கொண்டுள்ளனர். இதனால் டார்க் நிறங்களைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் லைட் இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தினால் உதடுகள் மேலும் அழகாக தெரியும். பிரகாசமான உதடு வண்ணங்களுடன் டார்க் கண் மேக்கப் செய்யலாம். இதனுடன் முக்கியமாக லிப் லைனரையும் முயற்சிக்க வேண்டும். இது உங்கள் தாடைக்குக் கீழே உள்ள பகுதியின் அகலத்தை அதிகரிக்கும். மென்மையான கூர்மையான கோடுகளை கொண்டு வருவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
ஓவல் முக வடிவம் கொண்ட பெண்கள் மேக்கப் போடுவதால் மேலும் அவர்களின் தோற்றம் அழகாக்குகிறது. உதடுகளைப் பற்றி அதிகம் சிந்திக்கத் தேவையில்லை. நீங்கள் ஒரு விருந்துக்குச் செல்லும் போதெல்லாம் உங்கள் முக நிறங்களுக்கு ஏற்ப உதடுகளிலும் அல்லது கண்களிலும் மேக்கப் போட்டால் போது, அழகாக தெரிவீர்கள்.
டைமண்ட் வடிவ உதடுகளைக் கொண்ட பெண்கள் லிப் லைனரைப் பயன்படுத்தும்போது அவர்களின் நேச்சுரல் லிக் வெளிப்படும் விதமாக தேர்வு செய்ய வேண்டும். இது உங்கள் உதடுகளை மிகவும் அகலமாகக் காட்டாது. இதனுடன், இது உங்கள் கன்னம் கொஞ்சம் குறுகலாகவும் இருக்கும். இதற்காக, நீங்கள் நடுநிலை தொனியில் மேட் லிப்ஸ்டிக் போட வேண்டும். இது உங்கள் உதடுகளுக்கு ஒரு குண்டான வடிவத்தைக் கொடுக்கும். இதனுடன், இது உங்கள் உதடுகளை மிகவும் வியத்தகு முறையில் காட்டும்.
மேலும் படிக்க: காதலர் தினத்தில் இந்த 3 ஹேர் ஸ்டைலை பயன்படுத்தி உங்கள் துணை முன் அழகாகத் தெரியவும்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com