குளிர் காலத்தில் ஸ்வெட்டருக்கு பதில் ஜாக்கெட் அணிவது தான் லேட்டஸ்ட் ஃபேஷனாக உள்ளது. குளிர்காலத்தில் ஆடைகளில் அதிக கவனம் செலுத்த முடியாது என்று பலர் நினைக்கிறார்கள். குளிர்காலத்தில் ஆடைகளுக்கும் மேல் ஸ்வெட்டர் அணிந்தால் தோற்றமே வீணாகிவிடும் என்று பலர் கூறுகின்றனர். ஆனால் குளிர்காலத்தில் கூட ஸ்டைலாக தோற்றமளிக்க முடியும்.
குளிர்காலத்தில் ஸ்டைலான தோற்றத்திற்கு ஜாக்கெட் அணியலாம். ஜாக்கெட்டுகளிலும் பல வகைகள் உள்ளன. பாம்பர், டெனிம் மற்றும் மோட்டோ போன்ற ஜாக்கெட்டுகள் இதில் அடங்கும். இந்த ஜாக்கெட் பார்ப்பதற்கும் அணிவதற்கும் ஸ்டைலாக இருக்கும்.
குளிர்காலத்தில் மிக ஸ்டைலாக தோற்றமளிக்க என்ன மாதிரியான ஜாக்கெட்களை அணியலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கில்ட் ஜாக்கெட்
குளிர்காலத்தில் கில்ட் ஜாக்கெட்டை ஸ்டைலாக அணிய, அதனுடன் ஃபுல் ஸ்லீவ் ஸ்வெட்டர் அல்லது டீ ஷர்ட் அணிய வேண்டும். இவை இரண்டின் நிறத்திலும் வேறுபாடு காட்ட முயற்சிக்கவும். கருப்பு மற்றும் வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு மற்றும் நீலம் போன்ற வண்ண கலவைகளை நீங்கள் முயற்சி செய்யலாம்.
மேலும் உங்கள் தோற்றத்தை மேம்படுத்த அச்சிடப்பட்ட ஜாக்கெட்டைகளை தேர்வு செய்யலாம்.
லெதர் ஜாக்கெட்
லெதர் ஜாக்கெட்டை ஸ்டைலாக அணிய முதலில் ஒரு டாப்ஸ் அணிந்துகொள்ளுங்கள். பொதுவாகவே பெண்களிடம் பல வகையான டாப்ஸ் இருக்கும். உங்களுக்கு விருப்பமான டாப்ஸை முதலில் அணிந்துகொண்டு அதற்கு மேல் லெதர் ஜாக்கெட் அணிந்தால் மிக ஸ்டைலாக இருக்கும். அல்லது ஃபர் ஜாக்கெட் கூட அணியலாம். அச்சிடப்பட்ட டாப்ஸ் அணிந்திருந்தால், சிம்பிளான ஜாக்கெட்டை தேர்வு செய்யவும்.
கோட் மாடல் ஜாக்கெட்
இந்த கோட் மாடல் ஜாக்கெட் உங்கள் தோற்றத்தை மிக ஸ்டைலாக மாற்றிவிடும். இதற்கு சிம்பிளான குர்தி அணிந்து அதன் மேல் இந்த கோட் மாடல் ஜாக்கெட் அணியலாம். இந்த கோட் மாடல் ஜாக்கெட் தற்போது லேட்டஸ்ட் ஃபேஷனாக உள்ளது.
இதுவும் உதவலாம்: இந்த கருநீல ஆடைகள் உங்களை மிக ஸ்டைலாக மாற்றிவிடும்
மற்ற குறிப்புகள்
- ஆடைக்கு ஏற்ற வகையில் ஆபரணங்களை தேர்வு செய்து அணியவேண்டும். இப்போதெல்லாம் கொரியன் நகைகள் டிரெண்டில் உள்ளன. எனவே ஜாக்கெட் அணியும் போது இரட்டை-மூன்று அடுக்கு சங்கிலி அணிந்தால் அழகாக இருக்கும்.
- மீட்டிங் போன்றவற்றிற்கு நீங்கள் ஜாக்கெட் அணிந்து செல்கிறார்கள் என்றால், அதனுடன் டி-ஷர்ட் அணிய முயற்சிக்கவும். மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணியவும்.
- பல வண்ணங்களிலும், பல டிசைன்களிலும் இந்த ஜாக்கெட்கள் விற்கப்படுகின்றன. நீங்கள் எல்லா உடைகளுடனும் அணிந்து செல்ல எளிமையான கருப்பு ஜாக்கெட்டை வாங்கிக்கொள்ளலாம்.
இதுவும் உதவலாம்: சிம்பிள் புடவைகளில் ஸ்டைலாக தெரிவது எப்படி?- இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com