herzindagi
bright face big image

முகத்திற்கு உடனடி பொலிவு தரும் சுரைக்காய் ஃபேஸ் பேக்... ட்ரை பண்ணி பாருங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்

சுரைக்காய் சரும பராமரிப்புக்கு மிகவும் நல்லது. மேலும் இந்த கட்டுரையில் சுரைக்காய் எவ்வாறு சரும பராமரிப்புக்கு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்
Editorial
Updated:- 2024-05-07, 00:35 IST

முகத்தின் அழகை அனைவரும் பார்ப்பதால் சருமத்தை பராமரிப்பது மிகவும் அவசியம். பெண்கள் தங்கள் சருமத்தை பராமரிக்க பல பொருட்கள் மற்றும் செயல்முறைகளை பயன்படுத்தி பார்க்கிறார்கள். அதில் இந்த சுரைக்காய் வைத்தியத்த்தியும் சேர்த்துக்கொள்ளலாம். சுரைக்காய் ஆரோக்கியத்திற்கும் சரும பராமரிப்புக்கும் சிறந்த தீர்வாகும். சுரைக்காயை சருமத்தில் எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம். இதை பற்றி அழகு நிபுணர் ரேணு மகேஸ்வரியிடம் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க

சுரைக்காய் மற்றும் முல்தானி மெட்டி

green facepack inside

முல்தானி மெட்டியுடன் சுரைக்காய் கலந்து பேஸ் பேக் போடலாம். சுரைக்காய் பல வைட்டமின்களைக் கொண்டுள்ளது மற்றும் நார்ச்சத்து, இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற பல பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த பண்புகள் அனைத்தும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் சருமத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில் முல்தானி மெட்டி முகத்திற்கு பல நன்மைகள் கொண்டுள்ளது மற்றும் இந்த பண்புகள் அனைத்தும் சருமத்திற்கு நன்மை பயக்கும். வல்லுனர்களின் கூற்றுப்படி சுரைக்காய்  முல்தானி மெட்டியுடன் கலந்து குளிர்ச்சியாகப் முகத்தில் பயன்படுத்தலாம். இது முகத்தை உடனடியான பொலிவை தருகிறது. 

சுரைக்காய், முல்தானி மெட்டி பயன்படுத்தும் முறை 

  • சுரைக்காய் அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த சுரைக்காய் சாற்றில் முல்தானி மெட்டியை கலக்கவும்.
  • அதன்பின் இந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவவும்.
  • பேஸ்ட் காய்ந்த பிறகு சருமத்தைக் கழுவ வேண்டும்.
  • இந்த செயல் முறையை வாரத்திற்கு 2 முதல் 3 முறை முயற்ச்சிக்காலம்.

மேலும் படிக்க: முகத்தை ஆழமாக சுத்தம் செய்ய இனி பியூட்டி பார்லருக்கு போக வேண்டும்.. இதை ட்ரை பண்ணி பாருங்க

சுரைக்காய் மற்றும் வெள்ளரியை

cucumber facepack inside

வெள்ளரிக்காயுடன் சுரைக்காய் கலந்து சருமத்தில் தடவலாம். வெள்ளரிக்காயில் மிக அதிக அளவு தண்ணீர் உள்ளது. வெள்ளரிக்காய் முகத்தை குளிர்விக்கும் அதே வேளையில் பொலிவையும் தருகிறது. வெள்ளரிக்காயுடன் சுரைக்காய் கலந்து நடலாம்.

சுரைக்காய்,  வெள்ளரியை பயன்படுத்தும் முறை

  • சுரைக்காய் மற்றும் வெள்ளரி இரண்டையும் அரைக்கவும்.
  • துணி மற்றும் வடிக்கட்டி உதவியுடன் அதை வடிகட்டவும்.
  • சுரைக்காய் மற்றும் வெள்ளரிக்காய் தண்ணீரை சருமத்தில் தடவவும்.
  • இந்த நீரை சருமத்தில் 10-15 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
  • இதற்குப் பிறகு முகத்தை நன்கு கழுவ வேண்டும்
  • இந்த தண்ணீர் சருமத்தை ஈரப்பதமாக்குங்கள்.
  • இந்த தீர்வை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்து வந்தால் உங்கள் சருமம் அழகாக மாறும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit: Freepik & Google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com