இந்திய கலாச்சாரத்தில் புடவையும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. புடவைகள் அனைத்து வயது பெண்களும் அணியும் பாரம்பரிய உடையாகும். ஆயிரக்கணக்கில் விதவிதமான உடைகள் இருந்தாலும், புடவை அணிந்தால் அது தனி அழகையே தருகிறது. இந்தியாவில் புடவைகள் ஒவ்வொன்றும் தனித்துவமான பாணி மற்றும் வடிவமைப்பைக் கொண்டுள்ளன. அதிலும் தமிழ்நாட்டில் காஞ்சீவரம் புடவைகள் முதல் செட்டிநாடு புடவைகள் வரை பல வடிவமைப்புகள் கொண்டுள்ளது. காஞ்சீவரம், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், போச்சம்பள்ளி, தர்மாவரம், ஆரணி, கும்பகோணம், தென்காசி, செட்டிநாடு, சேலம், கடலூர், ஈரோடு, திருநெல்வேலி, திருபுவனம், சின்னாளபட்டி பட்டுப் புடவைகள் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு வகையான சேலைகள் அதன் தனித்துவமான வடிவங்களில் உருவாக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் 5 முக்கிய புடவை வகைகளை பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் 5 பாரம்பரிய சேலை வகைகள்
பல நூற்றாண்டுகளாக இந்திய பெண்களின் மனம் கவர்ந்த ஆடைகளில் புடவை முதலிடத்தில் இருந்து வருகிறது. அதிலும் தனித்தன்மை பெற்ற தமிழ்நாட்டில் பாரம்பரிய புடவை வகைகளை பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் பட்டு புடவைகள்
காஞ்சிவரம் புடவைகள் வகைகள் தமிழ்நாட்டின் மிக முக்கியமான பாரம்பரிய புடவை வகைகளில் ஒன்றாகும். இதன் பிரகாசமான வண்ணங்கள், விரிவான வடிவமைப்புகள் மற்றும் கலை நேர்த்திக்காக அறியப்படுகின்றது. அவை பெரும்பாலும் தங்கம் மற்றும் வெள்ளி நூலை கொண்டு ஜரிகள் அமைக்கப்படுகிறது. இந்த புடவைகள் மல்பெரி பட்டில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த புடவைகளின் பல்லு கனமானதாக இருக்கும். காஞ்சிவரம் புடவைகள் தமிழ்நாட்டின் ஆழ்ந்த கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
Image Credit: pinterest
தமிழ்நாட்டின் ஆரணி பட்டு புடவைகள்
தமிழ்நாட்டின் ஆரணி நகரில் உருவாக்கப்படும் ஒரு பாரம்பரிய பட்டுச் சேலை ஆகும். இந்த பட்டுப்புடவைகளை ஆரணி நகரில் தயாரிக்கப்படுவதால் ஆரணி பட்டு நகரம் எனவும் அழைப்பர்கள். காஞ்சிபுரத்திற்கு அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்றது இந்த ஆரணி பட்டு. அசல் வெள்ளி ஜரிகை இழைகளை பயன்படுத்தி நெசவு செய்யும் கைத்தறி பட்டுச் சேலை குழுமங்களிலியே மிகப்பெரிய குழுமமாக ஆரணி பட்டுகள் இருக்கின்றன, தங்க ஜரிகளும் உருவாக்கப்படுகிறது.
Image Credit: pinterest
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் பட்டுப் புடவைகள்
கோயம்புத்தூர் பட்டுப் புடவைகள் அவற்றின் உயர்ந்த தர தோற்றம் மற்றும் உணர்வுகளுக்கு பெயர் பெற்றது. தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்புத்தூர் நகரத்தில் இந்த புடவைகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் தனித்துவமான வடிவமைப்புகள் மற்றும் வடிவங்களுக்காக அதிக மக்கள் இந்த புடவைகள் மீது ஆர்வம் கொள்கிறார்கள். இந்த புடவைகள் பெரும்பாலும் பிரகாசமான வண்ணங்கள் மற்றும் அடர்த்தியான வடிவமைப்புகளுடன் தயாரிக்கப்படுகின்றன. புடவைகள் பொதுவாக பட்டு மற்றும் பருத்தி அல்லது பட்டு மற்றும் ஜரி ஆகியவற்றின் கலவையுடன் தயாரிக்கப்படுகின்றன. புடவைகள் அவற்றின் ஆடம்பரமான தோற்றமானது விசேஷ நிகழ்வுகளில் அணிய அழகாக இருக்கும்.
Image Credit: pinterest
தமிழ்நாட்டின் கும்பகோணம் பட்டுப் புடவைகள்
தமிழ்நாட்டின் வரலாற்று நகரமான இருந்துவரும் கும்பகோணத்தில் இருந்து உருவாக்கப்படும் இந்த பட்டுப் புடவைகள் மிகுந்த கலைநயத்துடன் உருவாக்கப்படுகிறது. இந்த கும்பகோணப்புடவைகள் தூய பட்டு துணி இயற்கையான பளபளப்பைக் கொடுக்கிறது, புடவைக்கு தனித்துவமான கவர்ச்சியையும் நேர்த்தியையும் கொடுக்கிறது. கையால் நெய்யப்பட்ட கும்பகோணம் பட்டுப் புடவைகள் அணிய இலகுவாகவும், வழவழப்பு தன்மைக்கு கொண்டதாக இருக்கும்.
Image Credit: pinterest
தமிழ்நாட்டின் செட்டிநாடு பட்டுப் புடவை
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செட்டிநாட்டி உருவாக்கப்படும் இந்த புடவைகளுக்கு ஒரு தனி மவுசு உண்டு. இந்த புடவைகள் துடிப்பான வண்ணங்களில் நேர்த்தியான வடிவமைப்புகளால் உருவாக்கப்படுகிறது. இந்த புடவைகள் திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் சடங்குகளுக்கு அணிய பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. புடவைகள் இயற்கை, கோவில் கட்டிடக்கலை, மலர் வடிவங்கள், மயில்கள் மற்றும் கிளாசிக் பைஸ்லி வடிவமைப்புகளை கொண்டு உருவாக்கப்படுகிறது.
Image Credit: pinterest
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: pinterest
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation