வட இந்தியாவில் மணப்பெண்களுக்குக் குந்தன் நகைகள் அணிவது பாரம்பரிய நகைவகையில் ஒன்றாகும். தென் இந்தியாவிலும் விசேஷ நாட்களில் பெண்கள் குந்தன் நகை வகைகளை விரும்புகிறார்கள். இந்த ஆபரணமானது தனித்துவமான வேலைப்பாடுகளால் பெண்களை ஈர்க்கிறது. இந்த வகையான நகைகள் செழுமை மற்றும் ஆடம்பரத்துடன் காட்சி அளிக்கிறது. பெண்களைக் கவர்ந்திழுக்கும் மற்றும் உங்களை ராணியாக உணர வைக்கும் குந்தன் வடிவ நகைகள் சிலவற்றைப் பார்க்கலாம் .அழகாக வடிவமைக்கப்பட்ட குந்தன் ஜூவல்லரி செட் அனைத்து வகையாக நிகழ்ச்சிகளுக்கும் அணியச் சிறந்த தேர்வாக இருக்கும் மற்றும் பெரிய ஃபேஷன் நபராக உங்களை உணர வைக்கும். சில குந்த நகை வடிவங்களைப் பார்க்கலாம்.
விசேஷ நாட்களில் பெண்கள் குந்தன் நகை வகைகளை விரும்புகிறார்கள். அவர்களுக்காக குந்தன் ஜூவல்லரி செட் வகைகளில் லேட்டஸ்ட் கலெக்ஷனை பார்க்கலாம்
திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு இந்த குந்த நகை சிறந்த தேர்வாக இருக்கும், இது பார்க்க ராணி அணிந்திருக்கும் ஹாரம் வகையை போல் காட்சியளிக்கும். இது போன்ற வடிவமைப்பைக் கொண்ட ஹாரம் அனைத்து பெண்களையும் கவர்ந்து இழுக்கச் செய்யும். குறிப்பாக மணப்பெண்களுக்கு இந்த குந்தன் நகைகள் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த டிசைன் அடுக்குகளைக் கொண்டு பிரம்மாண்ட தோற்றத்தைத் தரக்கூடியது. இந்த நெக்லஸை கனமானதாக மட்டுமல்லாமல் நீளமாகவும் இருக்கிறது. முடிவில் தங்க முத்துக்கள் ஆபரணத்தின் அழகியல் மதிப்பைக் கூட்டுகின்றன.
Image Credit: Pinterest
ஆடம்பரமான தோற்றத்தைத் தரும் இந்த குந்தன் வகை நகை தங்க ஓடுகளில் பச்சை நிறத்தில் ஒரு சோக்கர் மற்றும் எளிமையான பெரிய நெக்லஸ் அணிந்தால் அனைவரின் கண்கள் உங்களை மட்டுமே பார்க்கும். சிறிய கற்கள் பதித்த வடிவ நகைகள் பார்க்க இன்னும் அழகாக இருக்கும். இதுபோன்ற அனைத்து டிசைன்களிலும், குந்தன் நகைகளை வெவ்வேறு கற்களுடன் இணைக்கும்போது பார்க்க அழகாக இருக்கும்.
Image Credit: Pinterest
இந்த பச்சை கற்கள் பதித்த குந்தன் நகை அணியும் பெண்கள் பிரகாசம் மற்றும் கவர்ச்சியாகத் தெரிவார்கள். குந்தன் நெக்லஸ் டிசைன்கள் கனமான முதல் ரீகல் பிரைடல் ஒவ்வொரு மணப்பெண்களின் முழு அழகையும் வெளிப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பன்முகத்தன்மை மற்றும் நுட்பமான வடிவமைப்பு காரணமாக,நவீன கால பெண்களுக்கு இந்த வகை நகைகள் கண்டிப்பாகப் பிடிக்கும்.
Image Credit: Pinterest
மேலும் படிக்க: திருமண பெண்களுக்கான சிறந்த 5 பிரைடல் மேக்கப் லுக்
இந்த நவரத்தின ராணி ஹாரம் பெண்களின் இதயத்தைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நகை பார்க்க எளிமையான தோற்றத்திலும், ஆனால் மனதிற்கு ஒரு முழுமையான தொற்றத்தை தரக்கூடியது. இந்த டிசைன் கண்டிப்பாக இன்றைய தலைமுறைக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும்.
Image Credit: Pinterest
மரகத குந்தன் நகைகள் இப்போதெல்லாம் டிரெண்ட் நகைகளாக இருக்கின்றது. இந்த புதிய வகை குந்தன் நகை வியக்கத்தக்கது மற்றும் பிரமிக்கும் வகைகளிலும் இருக்கிறது. இந்த மரகத துண்டு நுட்பமான தங்க சங்கிலிகளில் பின்னிப்பிணைந்த மேல் சுழற்சி செய்யப்பட்ட நகைகளை தயாரிக்கப்பட்டுள்ளது.
Image Credit: Pinterest
மேலும் படிக்க: மணப்பெண்களுக்கான சிறந்த 5 வகையாக பிரைடல் கவுன் டிசைன்கள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com