herzindagi
dust repellent spray

வீட்டை சுத்தப்படுத்த பிரத்யேக தூசி நீக்கும் ஸ்ப்ரே! நீங்களே தயாரிக்கலாம்...

வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் நமக்கு கடும் சவால் அளிக்கக்கூடிய விஷயமாக தூசி உள்ளது. வீட்டை தூசி இன்றி தூய்மையாக வைத்திருக்க கடையில் ஸ்ப்ரே வாங்க வேண்டிய அவசியமில்லை. நாமே தயாரிக்கலாம்.
Editorial
Updated:- 2024-08-08, 00:50 IST

சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னை மாசு. வீட்டிற்கு வெளியே செல்லும் போது சுற்றுச்சூழல் மாசுபாட்டால்  நாம் பாதிக்கப்படுவதை தவிர்க்க முக கவசம் அணிகிறோம். ஆனால் வீட்டிற்குள் தூசி வடிவில் மாசு நம்மை ஆக்கிரமித்துவிடுகிறது. கண்களுக்கு மிகச் சிறிதாக தெரியும் தூசியை பொருட்படுத்த தவறினால் அது நீண்ட கால பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ஆஸ்துமா, தூசி ஒவ்வாமை போன்ற சுவாசப் கோளாறு பிரச்னைகளால் பாதிப்படைவோம். சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்து நமது கைகளில் இல்லாத காரணத்தால் வீடு மாசுபடாமல் இருப்பதை சில விஷயங்கள் மூலம் உறுதிப்படுத்தலாம். வீட்டில் இருக்கும் தூசியை விரட்டி சுத்தமாக இருக்க விரும்பினால் தூசியை நீக்குவதற்கான ஸ்ப்ரேவை சில பொருட்களை கொண்டு உங்களால் தயாரிக்க முடியும்.

diy dust spray

தூசியை விரட்டும் ஸ்ப்ரே

வீட்டிற்கு தேவையான பொருட்களை கடையில் நாம் வாங்குகிறோம். ஆனால் கேட்காமலேயே வீட்டிற்குள் தவிர்க்க முடியாத ஒன்றாக தூசி குடியேறிவிடுகிறது. தூசியை அகற்றுவதற்கு சில தூய்மைப்படுத்தும் வழிகள் உள்ளன. வீட்டின் முடுக்குகளில் தேவைற்ற அழுக்கு, தூசி சேர்வதை தடுக்க தூசி விரட்டும் ஸ்ப்ரே மிகவும் உதவும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டே நீங்கள் தூசி விரட்டும் ஸ்ப்ரேவை தயாரிக்கலாம்.

தூசி விரட்டும் ஸ்ப்ரே செய்யத் தேவையானவை

  • அரை கப் காய்ச்சி வடிகட்டிய வெள்ளை வினிகர்
  • இரண்டு கப் தண்ணீர்
  • கால் கப் ஆலிவ் எண்ணெய்
  • ஸ்ப்ரே பாட்டில் 
  • உங்கள் தேவைக்கு ஏற்ப மற்றொரு எண்ணெய்

தூசி விரட்டும் ஸ்ப்ரே தயாரிக்கும் முறை

  • ஸ்ப்ரேவை நிரப்ப இருக்கும் பாட்டிலில் அரை கப் வெள்ளை வினிகர் மற்றும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றவும்
  • அடுத்ததாக கால் கப் எண்ணெயை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றுங்கள். தூசி விரட்டுவதற்கு ஆலிவ் எண்ணெய் பெரிதும் உதவுகிறது.  
  • சரியான அளவில் கலந்த பிறகு பாட்டிலை மூடிவிட்டு நன்கு குலுக்கவும். தூசியை விரட்டும் ஸ்ப்ரே ரெடி...

ஸ்ப்ரேயை எப்படி பயன்படுத்துவது ?

தூசி படிந்திருக்கும் மரச் சாமான், பிளாஸ்டிக் பொருட்கள் மீது இந்த ஸ்ப்ரேவை தெளிக்கவும். சில நிமிடங்களுக்கு காத்திருங்கள். ஸ்ப்ரே செய்யும் மாற்றத்தை பாருங்கள். இறுதியாக துணியை கொண்டு துடைக்கவும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com