
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி என்பது பல பெண்களுக்கு ஒரு பெரிய தொந்தரவாக இருக்கலாம். இதனால் இடுப்பு பிடிப்புகள், வயிறு வீக்கம் மற்றும் மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம். இந்த அறிகுறிகளைப் போக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், சில காய்கறிகளை உட்கொள்வது ஒரு இயற்கையான மற்றும் பயனுள்ள முறையாகும். இந்த காய்கறிகளை உங்கள் உணவில் சேர்ப்பது உடல் வீக்கத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. இது மாதவிடாய் பிடிப்புகளுடன் தொடர்புடைய அசௌகரியத்தைக் குறைக்க உதவும். அந்த வரிசையில் மாதவிடாய் வலியைப் போக்க சாப்பிட வேண்டிய சில காய்கறிகளைப் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கீரை என்பது இரும்பு மற்றும் மெக்னீசியம் சத்து நிறைந்த ஒரு சக்தி வாய்ந்த காய்கறியாகும். இரும்புச்சத்து மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடல் இழந்த இரத்தத்தை நிரப்ப உதவுகிறது. அதே நேரத்தில் மெக்னீசியம் தசைகளை தளர்த்தவும் சதை பிடிப்பைக் குறைக்கவும் உதவுகிறது. உங்கள் உணவில் கீரை சேர்த்து, சாலடுகள், ஸ்மூத்திகள் அல்லது சமைத்த கறியாக இருந்தாலும், மாதவிடாய் வலியைக் குறைக்கவும், உங்கள் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கவும் பெரிதும் உதவுகிறது.
ப்ரோக்கோலி அதன் அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் காரணமாக மாதவிடாய் வலியைக் குறைப்பதற்கான மற்றொரு சிறந்த காய்கறியாகும். இதில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த உதவுகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனால் உடல் வீக்கம் மற்றும் அசௌகரியத்தை குறைக்கிறது. ப்ரோக்கோலியில் வைட்டமின் பி 6 சத்து அதிகம் உள்ளது. இது மனநிலை மாற்றங்கள் மற்றும் எரிச்சல் போன்ற மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறியான (பி. எம். எஸ்) அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு வைட்டமின் ஏ சத்தின் சிறந்த மூலமாகும். இது ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்தவும் உடல் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும். இதில் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் உள்ளதால் இது மாதவிடாய் காலத்தில் சதை பிடிப்பு மற்றும் அசௌகரியத்தை போக்க உதவுகிறது. இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை வறுத்தோ, மசித்தோ அல்லது சூப்கள் மற்றும் குழம்புகளில் சேர்த்து சத்தான உணவாக சாப்பிடலாம்.
பெல் பெப்பர் பார்ப்பதற்கு மிளகு போலவே இருக்கும். இதில் வைட்டமின் சி சத்து நிரம்பியுள்ளது. இது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தைக் குறைக்கவும் நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. அதே போல உடலுக்கு வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. இது மாதவிடாய் காலத்தில் இரத்த சோகை மற்றும் சோர்வு ஆகியவற்றைத் தடுக்க உதவுகிறது. சாலடுகள், காய்கறி பொரியல் அல்லது உணவில் இந்த பெல் பெப்பர் சேர்ப்பது உங்கள் உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகிறது.
அந்த வரிசையில் இந்த காய்கறிகளை உங்கள் உணவில் சேர்ப்பது மாதவிடாய் வலியைக் குறைக்கவும், மாதவிடாய் காலத்தில் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் கவனம் செலுத்துவதன் மூலம், உங்கள் உடலின் இயற்கையான செயல்முறைகளை நீங்கள் ஆதரித்து மாதவிடாய் பிடிப்புகளுடன் தொடர்புடைய அசௌகரியத்தை குறைக்கலாம்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com