Herbal tea: ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை தேநீர்!

காபி, டீ அருந்துவதால் பித்தமும் சர்க்கரையும் தான் அதிகரிக்கும். உடல்நலனும், ஆரோக்கியமும் வேண்டும் என்றால் இந்த மூலிகைத் தேநீர் குடித்து பாருங்க.

 
herbal tea benefits

நம்மில் பலருக்கும் தினமும் காலை டீ குடிக்கும் பழக்கம் உள்ளது. இன்னும் சிலர் காலை, மாலை, இரவு என்று மூன்று வேலைகளிலும் தேநீர் குடிப்பது உண்டு. இயற்கை முறையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த வழி மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் பானங்கள் அருந்துவது. பல்லாயிரம் ஆண்டுகளாக நம் பாரம்பரிய மருத்துவத்திலும், வீட்டு மருத்துவத்திலும் நாம் பயன்படுத்தி வரும் விஷயம் என்னவென்றால் அது உடல் நலமின்றி இருக்கும் போது மட்டுமே சாப்பிடும் மருந்தாக இருந்தது. இந்தக் காலத்தில் தேநீர், காபி இப்படி ஏதாவது ஒரு பானத்தை காலை, மாலை வேளைகளில் உட்கொள்ளாவிட்டால் நம்மில் பலருக்கு மனம் பேதலித்து விடுகிறது. ஆனால் இது உற்சாகம் தருவது போல தெரிந்தாலும், இந்த பானங்களால் உடல்நலனுக்கு எந்தப் பயனும் இல்லை என்பது தான் உண்மை. இதற்க்கு பதில் உடலில் பித்தமும் சர்க்கரையும் தான் அதிகரிக்கிறது. உற்சாகமும் வேண்டும், உடல்நலனும் வேண்டும் என்று ஆசைப்படுக்கிறவர்களுக்காக இந்த விதவிதமான மூலிகைத் தேநீர் வகைகள் இருக்கின்றன.

ஹெர்பல் டீ என்று கூறப்படும் மூலிகைத் தேநீர் என்பது தேநீரே அல்ல, தேநீருக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேயிலை தவிர்த்து வேறு மூலிகை அல்லது தாவரங்களில் இருந்து பெறப்படும் வடிகட்டிய சாறுகளை தான் மூலிகைத் தேநீர் என்று சொல்கிறோம். தாவரங்களின் இலைகள், பூக்கள், விதைகள், பழங்கள், பட்டை மற்றும் வேர்கள் போன்ற பாகங்களை கொண்டு வடிசாறு தயாரிக்கப்படும். ஒரே ஒரு மூலிகை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மூலிகைகள் கொண்டு இந்த மூலிகைத் தேநீரைத் தயாரிக்க முடியும். நம் உடலை ஆரோக்கியமாக பராமரிக்கவும் நோய்களில் இருந்து காத்துக் கொள்ளவும் இந்த ஹெர்பல் டீ உதவி செய்கின்றது. இந்த மூலிகைகளில் விட்டமின்கள், ஆண்டி ஆக்சிடெண்ட்கள், உடலுக்கு அவசியமான எண்ணெய்கள், நார்ச்சத்து போன்ற உடல் நலத்துக்கு அவசியமான சத்துகள் நிறைந்திருக்கின்றன.

மேலும் படிக்க:உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!

ஹெர்பல் டீயின் நன்மைகள்:

  • இது உற்சாகத்தை அளிப்பதுடன், நம் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கும்.
  • உடலில் நச்சுகளை நீக்கி தூய்மைப்படுத்தி, உடலின் செயல்திறனை மேம்படுத்த உதவும்.
  • மனதுக்கு அமைதியையும் சாந்தத்தையும் அளிக்கிறது.
  • உணவு செரிமான மண்டல செயல்பாடுகளை எளிதாக்கும்.
  • தூக்கமின்மை பிரச்னையை குறைக்கும்.
  • நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும்.

சில மூலிகைத் தேநீர் வகைகள் இதோ:

சீமை சாமந்தி:

benefits of chamomile tea ()

இயற்கையாகவே மனதை அமைதிப்படுத்தும் தன்மை கொண்டது சீமை சாமந்தி தேநீர். இது நரம்புகளை அமைதிப்படுத்தி மன அழுத்தம், மனச்சோர்வை நீக்குகிறது. இன்சோம்னியா என்று கூறப்படும் தூக்கமின்மை நோயையைகூட இது குணப்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒற்றைத் தலைவலிக்கும் இது ஒரு சிறந்த மருந்து.

ஏலக்காய்:

இஞ்சியைப் போல ஏலக்காய் வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்றுப் பிரச்னைகளை குணப்படுத்தும். காலை நேர மந்தத்தால் அவதிப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த ஏலக்காய் உதவும். சிறு உரலில் லேசாக ஏலக்காய் இடித்து அதன் மேல் தோலை நீக்கவும். அதன் விதைகளை பொடியாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சி அல்லது லவங்கத்துடன் ஏலக்காய் நன்கு கலக்கும். ஒரு கோப்பை தேநீருக்கு ஒரு தேக்கரண்டி விதைகளை சேர்த்துக் கொள்ளவும்.

லவங்கப்பட்டை:

மூட்டு வழியினால் அவதிப்படுகிறவர்களுக்கு சூடாக ஒரு கப் லவங்கப்பட்டை தேநீர் அருந்துவது ஆறுதலளிக்கும். உடலில் குளுக்கோஸ் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுவதுடன், கொலஸ்டிரால் மற்றும் கொழுப்புகளின் அளவையும் குறைக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. மேலும் இது செரிமான பிரச்சனைகளை குணமாக்கும்.

புதினா:

peppermint tea ()

அற்புதமான மணமும் குளிர்ச்சி உணர்வும் அளிக்கும் மூலிகை புதினா. வயிற்றுவலி, மலச்சிக்கல், ஜீரணக் கோளாறுகளுக்கும் இது மருந்தாக பயன்படுகிறது. புதினாவில் உள்ள மென்தால் குமட்டல், தலைவலி, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் மாதவிடாய் பிடிப்புகளை குறைக்கும் தன்மை கொண்டது. காலையில் சூடாக ஒரு கப் துளசி டீ அருந்துவது காலைநேர மந்தத்தன்மையை போக்கும். மேலும் இது பல் ஆரோக்கியத்துக்கும் ஏற்றது.

மேலும் படிக்க: இலவங்கப்பட்டை தண்ணீருடன் உங்கள் நாளைத் தொடங்கினால் என்ன நடக்கும்?

துளசி:

ஆயுர்வேதத்தில் இதயத்தையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும் மூலிகையாக துளசி சொல்லப்படுகிறது. குறிப்பாக சளி, இருமல், மூச்சு விடுவதில் பிரச்சனை உள்ளவர்களுக்கு துளசி உதவும். இதனுடன் இஞ்சி அல்லது ஒரு சிட்டிகை மிளகு சேர்த்துக்கொள்ளலாம். சுவைக்கு ஏற்ப தேனும் சேர்க்கலாம். ஒரு கப் நீருக்கு ஒரு ஸ்பூன் உலர்த்திய துளசி இலைகளை சேர்க்கவும்.

Image source: google
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP