ஜவ்வரிசி சாப்பிட்டால் இதய நோய், எலும்பு நோய் உட்பட 6 உடல்நல பிரச்சனைகள் தீரும்

மரவள்ளிக்கிழங்கின் முத்து என்று அழைக்கப்படும் ஜவ்வரிசி பாயாசம், கிச்சடி, வடை போன்ற உணவுகளில் சேர்க்கப்படுகிறது. பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் இதனுள் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
  • Alagar Raj
  • Editorial
  • Updated - 2024-11-13, 16:22 IST
image

மரவள்ளிக்கிழங்கு வேரின் ஸ்டார்ச்சில் இருந்து ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. அதனால் தான் மரவள்ளிக்கிழங்கு முத்து என்ன ஜவ்வரிசி அழைக்கப்படுகிறது. இந்திய உணவுகளில் பிரதான மூலப் பொருளாகவும் ஜவ்வரிசி இருக்கிறது. பாயாசம் உள்ளிட்ட இனிப்பு வகைகள் மற்றும் கிச்சடி, வடை போன்ற உணவுகளில் ஜவ்வரிசி சேர்க்கப்படுகிறது. பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் இதனுள் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அவை உடலுக்கு பல வகைகளில் பலனளிக்கிறது.


ஜவ்வரிசியின் சத்துக்கள்:

மரவள்ளிக்கிழங்கில் உள்ள அதே சத்துக்கள் தான் ஜவ்வரிசியிலும்உள்ளது.இதன் கார்போஹைட்ரேட், புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. இதை சாப்பிடுவதால் உடலில் என்ன பிரச்சனைகள் தீரும் என்பதை பார்க்கலாம்.

ஜவ்வரிசியின் ஆரோக்கிய நன்மைகள்

இதய ஆரோக்கியம்:

ஜவ்வரிசியில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கின்றது. இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான அபாயம் தடுக்கப்படுகிறது. எனவே இதய நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஒப்புதலுடன் ஜவ்வரிசியை சாப்பிடலாம்.

உடல் எடை குறையும்:

கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளுடன் ஒப்பிடும்போது ஜவ்வரிசியில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது உங்கள் வயிற்றுக்கு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை தரும். மேலும் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது மற்றும் உங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆகையால் உடல் எடையை குறைக்க முயற்சிப்போர் ஜவ்வரிசியை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

கருவின் வளர்ச்சிக்கு உதவுகிறது:

கர்ப்பிணிகளுக்கு ஜவ்வரிசி சூப்பர் ஃபுட் என்றே கூறலாம். இது கருவின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளது. இதனால் கர்ப்பிணிகள் தங்கள் உணவில் ஜவ்வரிசியை சேர்த்துக் கொண்டால் கருவின் வளர்ச்சி அதிகரிக்கும். உங்கள் மருத்துவரின் ஒப்புதல் பெற்று ஜவ்வரிசியை சாப்பிடலாம்.

செரிமானத்திற்கு நல்லது:

தினமும் இரவு அல்லது காலை ஜவ்வரிசியில் செய்த உணவை சாப்பிட்டால் அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் வாயு போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். ஜவ்வரிசியில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. இதனால் நீங்கள் ஜவ்வரிசியில் தயாரித்தஉணவை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.

மூளை ஆரோக்கியம்:

ஜவ்வரிசி மூளை ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. ஜவ்வரிசியில் உள்ள டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் மூளையில் உள்ள நினைவக மையங்களை செயல்படுத்தவும் உதவுகிறது.

எலும்புகள் வலுப்பெறும்:

ஜவ்வரிசி எலும்புகளை வலுவாக்க உதவுகிறது, ஆம் ஜவ்வரிசியில் நல்ல மூலமாக இருக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்பு வளர்ச்சி மற்றும் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க செய்கிறது. இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு நோயின் அபாயத்தைக் குறைக்கலாம். ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகள் வலுவிழந்து உடைந்து போகக்கூடிய நோயாகும்.

மேலும் படிக்க:வெறும் வயிற்றில் பச்சை காய்கறி ஜூஸ் குடித்தால் என்ன ஆகும்? ஆரோக்கிய நன்மைகள் என்ன?

ஜவ்வரிசியை உட்கொள்ளும் முறை:

ஜவ்வரிசியை உங்கள் அன்றாட உனவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு பல வழிகள் உள்ளன,

javvarisi vada

  • ஜவ்வரிசி பாயாசம்
  • ஜவ்வரிசி வடை
  • ஜவ்வரிசி தோசை
  • ஜவ்வரிசி கிச்சடி
  • ஜவ்வரிசி இட்லி

ஜவ்வரிசியால் செய்யப்படும் இந்த உணவுகள் மூலம் அதன் முழு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். மேலும் இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP