பிளாஸ்டிக் பாட்டிலில் சுடு தண்ணீர் குடிக்காதீங்க; இந்த பிரச்சனைகள் வரும் ஜாக்கிரதை

பிளாஸ்டிக் பாட்டிலில் சுடு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்தான விளைவுகள் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.  
image

பிளாஸ்டிக் பாட்டில்கள் நம் அன்றாட வாழ்வில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக வெளியூர் பயணங்களில் அல்லது வீட்டிலும் சுடு நீரை பிளாஸ்டிக் பாட்டிலில் சேமித்து வைப்பது ஒரு பொதுவான பழக்கமாக உள்ளது. ஆனால், இது உடலுக்கு எவ்வளவு கேடு விளைவிக்கும் என்பதை பலர் அறியாமல் இருக்கிறார்கள். பிளாஸ்டிக் பாட்டிலில் சுடு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்தான விளைவுகள் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு:


பிளாஸ்டிக் பாட்டில்களில் BPA (Bisphenol-A) மற்றும் பிற வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. சூடான நீரை இந்த பாட்டில்களில் ஊற்றும்போது, இவை நீரில் கரைந்து விடுகின்றன. இவை உடலில் சேர்ந்து, காலப்போக்கில் புற்றுநோயை உருவாக்கும் அபாயம் உள்ளது.

கருவுறுதல் பிரச்சனை:


பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து வெளியாகும் வேதிப்பொருட்கள், ஹார்மோன் சீர்குலைப்பை ஏற்படுத்துகின்றன. இது ஆண்களில் விந்தணு எண்ணிக்கையைக் குறைக்கும், பெண்களில் கருவுறுதல் திறனை பாதிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் இதனால் கருவில் உள்ள குழந்தைக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

pregnancy-women-2

கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள்:


பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து வெளியாகும் டாக்சின்கள், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் சேகரிக்கப்படுகின்றன. இவை நாளடைவில் இந்த உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கின்றன. கல்லீரல் கோளாறு, சிறுநீரகக் கற்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

இரைப்பை மற்றும் செரிமான பிரச்சனைகள்:


சூடான நீர் பிளாஸ்டிக்குடன் கலந்து, இரைப்பை மற்றும் குடல் சுவர்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதனால் வயிற்றுப் புண், அமிலம், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

Digestive-System

நரம்பு மண்டல பாதிப்பு:


BPA மற்றும் பிற டாக்சின்கள் நரம்பு மண்டலத்தை தாக்கி, நினைவாற்றல் குறைதல், மன அழுத்தம் மற்றும் மூளை வளர்ச்சி குன்றும் பிரச்சனைகளை உருவாக்குகின்றன. குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.


சரும பிரச்சனைகள்:


பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள வேதிப்பொருட்கள் உடலில் சேர்ந்து, சருமத்தில் எரிச்சல், ஒவ்வாமை, முகப்பரு போன்ற பிரச்சனைகளை உருவாக்குகின்றன.

The_Dangers_of_Drinking_From_Plastic_Water_Bottles_771a536c-91da-4f59-951a-47856958b881

மாற்று தீர்வுகள்:


பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், கண்ணாடி அல்லது BPA-இல்லாத பாட்டில்களை தண்ணீர் குடிக்க பயன்படுத்தவும். சுடு தண்ணீர் சேமிக்க களிமண் பானைகள் பயன்படுத்தலாம்.

அந்த வரிசையில் பிளாஸ்டிக் பாட்டில்களில் சுடு தண்ணீர் குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்து, பாதுகாப்பான மாற்று வழிகளை தேர்வு செய்யுங்கள். பிளாஸ்டிக் பாட்டில்களில் சூடு தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை பழக்கம் செய்யுங்கள்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP